பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

קית திருப்பேரெயில் மகர நெடுங் குழைக்காதன் 18? இதில் பராங்கு சநாயகி தனது உள் ளத்தினு ள்ளே ஒரு பெரிய திருவடித் திருநாள் நடந்து செல்லுகினற படி யைத் தாய்மாரிடம் பேசுகின்றாள். அவள் பெற்ற இறையருபவம் நம்மையும் பற்றத் தொடங்குகின்றது. 'கங்குலும் பகலும் (திருவாய் 1.2 என்ற திருவாய் மொழியில் பராங்குசநாயகியின் நிலையைத் திருத் தாயார் கூறியது நமது நினைவுக்கு வருகின்றது. சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பியவளாதலாலும், தாமரைக்கண் என்றே தளர்ந்தவளாதலாலும் அந்தத் திவ்வியாயுதங்களை ஏந்திக்கொண்டு இவளுக்குக் காட்சி தருகின்றான் எம்பெருமான். 'வன் காற்று அறைய மறிந்து கிடந்து அலர்ந்த மென்கால் கமலத் த டம்போல் பொலந்து நின்ற எம்பிரான் தடங் கண்கள்' (திருவிரு. 42) என்று ஒருக்கணித்துக் கடைக் கண்ணால் நோக்கிய திருக்கண்ணழகுடன் காட்சி தந்த விதத்தையும் பேசுகின்றாள் ஆழ்வார் நாயகி. முகில் வண்ண நிறத்துக்குப் பொருத்தமான வெளுப்பையும் சுரியையும் உடைத்தான திருச்சங்கையும், அங்கனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் எந்திய வண்ணம் தாமரைக் கண்கள் பிறழவந்து பெரிய திருவடித் திருத் தோளில் ஏறிச் சாரிகை வந்து தன் நெஞ்சினுள் உலாவு கின்ற எம்பெருமானைக் காணுமாறு அன்னை மார்களை வேண்டுகின்றாள் பராங்குசநாயகி. இவ்விடத்தில் எம் பெருமான் திருமேனிக்கு திவ்விய ஆயுதங்கள் பிரகாச மாகத் திகழ்வதுபோல அவனுடைய ஆன்ம குணங் கட்குத் திருக்கண்கள் பிரகாசமாக இருப்பதை எண்ணு கின்றோம். தண்ணளி தோன்றுவது கண்வழி அல்லவா? இவ்விடத்தில் பெரியாழ்வார் திருவுள்ளத்தில் திருக் கோயில் கொண்ட எம்பெருமானையும் நினைக்கின்றோம்.