பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் உள்ளது. அங்கனமே, தேனும் பாலும் கன்னலும் அமுத மாகித் தித்திக்கும் எம்பெருமானும் தன் அடியார்க்கு நேரிடும் இருவகை வினைகளாகிய பிணிகளை அவர்களை வருத்திப் போக்கும் இயல்பினை உடையவன் அல்லன்; அவர்களை மகிழ்வுற்றிருக்கச் செய்தே போக்குவான். உண் பதற்கு இனியதாய் உண்டாரைத் தேவராக நெடுங்காலம் வாழ்ந்திருக்கச் செய்யும் அமுதம் போன்றவன் இறைவன் என்பதனைக் குறிப்பிடுவதற்கென்றே ஆழ்வார் அவனை :தீது அவம் கெடுக்கும் அமுதம்' என்று உரைத்தார் என்று கொள்ளல் வேண்டும். இந்த எண்ணங்கள் நம் மனத்தில் எழுந்த வண்ணம் திருக்குளங்தை’ என்ற திவ்விய தேசத்தை நோக்கிச் 'சிற்றுந்தில் வந்து கொண்டிருக்கின்றோம். திருக் குளந்தை என்ற இத் திருத்தலம் சீவைகுண்டம் என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து வடகிழக்கில் ஏழு கல் தொலைவிலுள்ளது. இது நவதிருப்பதிகளுள் எட்டாவ தாகும். தண்பொருநை ஆற்றின் வடகரையிலுள்ளது. ஊருக் கருகில் பெரிய குளம் ஏரி) இருப்பதால் அப் பெயரால் இத் தலம் பெருங்குளம் என்ற பெயரையும் பெற்றது போலும்! திருக்கோயில் ஊரின் மேற்குப் பக்கத்தில் உள்ளது. ஊரை வந்தடைந்ததும் நம் வாகனத்தைக் கோயிலின் மதிலருகில் நிறுத்திவிட்டு நேராகத் திருக்கோயிலில் நுழைகின்றோம். நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கும் மாயக்கூத்தனையும், குளங்தை வல்லி நாச்சியாரையும்வணங்குகின்றோம். நம்மாழ்வாரின்,

  • கூடச்சென் றேன்.இனி என்கொ டுக்கேன்?

கோல்வளை கெஞ்சத் தொடக்கம் எல்லாம், பாடற்(று) ஒழிய இழந்து வ்ைகல் பல்வளை யார்முன் பரிச ழிந்தேன்; 2. திருவாய் 4.3:10