பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் மயக்கி இப்படியொரு கூத்துக் காண்பவன் என்று பொருள் கண்டு மகிழ்கின்றோம். பிறிதொரு நோக்கில், சங்கல்பம் என்னும் மாயையினால் திருவவதாரங்கள் செய்து அவற்றில் குடக்கூத்து, மரக்கால் கூத்து, குரவைக்கூத்து என்னும் படியாகப் பலவகைக் கூத்துகளைச் செய்து தன் செய்கைகளால் நம்மை மனங்குழைந்து அவனோடு ஈடுபடச் செய்பவன் என்று பொருள் கண்டு உவக் கின்றோம். மற்றுமொரு நோக்கில், 'சூட்டுகன் மாலைகள் துன்பன எந்தி, விண்ணோர்கள் கன்னீர் ஆட்டிஅம் தூபம் தராகிற்க வேயங்கு,ஓர் மாயையினால் ஈட்டிற வெண்ணெய் தொடுவுண்ணப் போக் து) இபில் ஏற்றுவான்கூன் கோட்டிடை ஆடினை கூத்து, அடல் ஆயர்தம் கொம்பினுக்கே..”* tதல் நீர் ஆட்டி-திருமஞ்சனம் செய்து, அம்துன்பம்அழகிய தூபம்; தொடு உண்ண-களவினால் உண்ண; அடல்-வலிமையுடைய, கொம்பினுக்குநப்-பின் னைக்கு; இமில்-முசுப்பு: வல்கூன் கோடு-வலிய வளைந்த கொம்பு | என்ற ஆழ்வார் பாசுரத்தையே நினைக்கின்றோம். 'பரமபதத்தில் நித்திய சூரிகள் திருமஞ்சனம் சமர்ப் பித்துத் திருமாலை சாத்தித் தூபம் காட்டும் அளவில் அப் புகையினால் திருமுக மண்டலம் மறையும் அந்தக் குறுகிய காலத்தில் வெண்ணெய் அமுதை நினைத்து அவசரமாகத் திருவாய்ப் பாடியில் எழுந்தருளி நம் பின்னைப் பிராட்டியின் பொருட்டு எருதுகளை அடர்த்து அவளை மணம் புணர்ந்தனை; உன்னுடைய ஆற்றலின் சிறப்பை என் சொல்ல வல்லோம்!” என்று ஆழ்வார் ஈடுபட்டுப் பேசுவதில் மனங்குழைகின்றோம். நம்