பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பாண்டி நாட்டு திருப்பதிகள் அடிவாரம் கீழ்மேல் 40 அடி; தென்வடல் 50 அடி; திருவாசல் 10 அடி. கோயிலின் முதன்மையான பகுதி அட்டாங்க விமானமே. இதன் உயரம் 96 அடி. இதன் உச்சியிலுள்ள தங்கக் கலசம் 5 அடி உயரமும் 64 அடி சுற்றளவும் உள்ளது. தஞ்சைக் கோபுரத்தின் நிழல் எப்போதும் தரையில் விழுவதில்லை என்பதை நாம் அறிவோம். அங்ங்னமே, இந்த விமானத்தின் நிழலும் தரையில் விழுவதில்லை .மூலைக்கு இரண்டாக நான்கு மூலைகளிலும் எட்டு விமானங்கள் அமைந்திருத்தலினால் இஃது அட்டாங்க விமானம் எனப்பெயர் பெற்றது. ஒன்றன் மீது ஒன்றாக மூன்று தளங்களையுடைய இந்த விமானத் தின் மேல்தளத்தில் திசைக்கொன்றாக எட்டுத் திசைகளி லும் எட்டு விமானங்கள் இருப்பதைக் காண்கின்றோம். இரணியவதத்திற்கும் பிறகு கதம்ப முனிவரின் வேண்டு கோளுக்கிணங்க நான்முகன் ஆணையினால் மயனும் விசுவகர்மாவும் இவ்விமானத்தை நிர்மாணம் செய்தனர் என்பது புராண வரலாறு. எட்டு விமானங்களும் திருமந்திரத்தின் எட்டெழுத்துகள் போலவும், விமானத் தின் மூன்று தளங்களும் திருமந்திரத்தின் மூன்று பதங்கள் (ஒம்+நமோ-நாராயணாய) போலவும், மூன்றெழுத்துக்களுடன் கூடிய (ஒம் = அ + உ + ம) பிரணவம் போலவும் அமைந்திருப்பதாக ஐதிகம். இராசகோபுரத்தைக் கடந்து முதல் தளத்திற்கு வருகின்றோம். முதல் தளத்தின் முன் மண்டபம் திரு மாமணி மண்டபம்’ என்ற திருநாமமுடையது; கண் கவர் வனப்புடையது. திருக்கோபுர வாயிலைக் கடந்து இந்த மணி மண்டபத்தை அடைந்ததும் முதலில் நமக்குக் காட்சி அளிப்பவர் சரபேசுவரர் கோலத்திலிருக்கும் சிவபெருமான். ஒரு சிறு கோயிலில் எழுந்தருளியிருக் கிறார் இவர். இவர் சுயம்பு மூர்த்தி தாமே முளைத்தெழுந் தவர். இரண்டு துண்டாக வெட்டப்பெற்ற நிலையில் காட்சி தருகின்றார். திருமால் நரசிங்கராக வந்தபோது