பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோட்டியூர் எந்தை g சிவபெருமான் சரபேசராக வந்ததாகக் கூறும் புராண வரலாற்றை விளக்குவதாக அமைந்ததே இம்மூர்த்தி போலும். இவரை வலம் வந்த பிறகுதான் கோயிலின் மணி மண்டபத்தில் நுழைகின்றோம். அங்கே நம் கண்முன் சேவை சாதிப்பவர் காளிங்கன் மீது நடனம் புரியும் கண்ணன். இதே மண்டபத்தில் சந்தான கிருட்டிணனும் காட்சி தருகின்றார். இந்த மணிமண்டபத்தின் தென் புறத்தில் நரசிங்க மூர்த்தியின் சந்நிதியும், வடபுறத்தில் இராமபிரான் சந்நிதியும் உள்ளன. நரசிங்கரின் (தெற்காழ் வான்) திருமுன்புதான் திருக்கோட்டியூர் நம்பி இராமா நுசருக்குத் திருமந்திரத்தின் பொருளை உபதேசித்ததாக வரலாறு. அந்த உண்மையை விளக்குவதுபோல் தெற் காழ்வான் சந்நிதிக்கு முன்னால் இராமாநுசரும் திருக் கோட்டியூர் நம்பிகளும் குருசீடர் பாவனையில் எதி ரெதிராக எழுந்தருளியுள்ளனர். இவர்களையெல்லாம் சேவித்துக்கொண்டு முதல் தளத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் சந்நிதிக்கு வருகின்றோம். இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் திருப் பாற்கடல் நாதன்; இவர் சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவர் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடல் வெண்மை நிறமுடையது. அதன் மீது இவருக்குப் படுக்கை யாக இருக்கும் ஐந்துதலை அநந்தன் தங்க நிறமுடையவன். அரவணையின் மீது அறிதுயில கொண்டிருப்பவர் நீலமணி போன்றவர். இவர் தேவர்களின் நடுவிலிருந்ததால் *ஸ்தித நாராயணன் என்ற திருநாமத்தால் வழங்கப் பெறுபவர். அநந் தன்மீது சயனித்திருப்பதால் இவரைப் பெரியாழ்வார் உரக மெல்லணையான்' என்று மங்களா சாசனம் செய்கின்றார். இந்தப்பாசுரத்தைக் காண்போம். 18. வடமொழியில் பன்னக மிருது சர்ப்ப சாயி’ என வழங்கப் பெறுவர்.