பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோலைவில்லி மங்கலத் தாமரைக் கண்ணன் 羅 துரங்கம் வாய்பிளக் தாலு றைதொலை வில்லி மங்கல மென்று, தன் கரங்கள் கூப்பித் தொழுமவ் ஆர்த்திரு காமங் கற்றதற் பின்னையே.' இரங்கி-நெஞ்சழிந்து; வாய்வெரீஇ-வால்வெருவி; அல மர வியாகூலப்பட்டு நிற்க; துரங்கம்-குதிரை.) என்பது பாசுரம். நீங்கள் இவளைத் தொலைவில்லி மங்கலம் கொண்டு சென்று அவ்வூர்த் திருநாமத்தைக் கற்பித்தீர்கள். அதன் பலனாக இவள் நாடோறும் அஃறிணைப் பொருள்கள் கூடக் கரையும்படி மிகப் பெரிய ஆர்த்தியுடன் மணிவண்ணா!' என்று ஓலமிட் டழைத்துத் தொலைவில்லி மங்கலம் என்று அவ்வூர்ப் பேயரையும் சொல்லி தன் கைகளைக் கூப்பித் தொழு கின்றாள்' என்கிறாள் தோழி. மரங்களும் இரங்கக்கூடுமோ என்று சிலர் எம்பா ரைக் கேட்டார்களாம். அதற்கு அவர் அருளிச் செய்தது: "இத் திருவாய்மொழி அவதரித்த அன்று தொடங்கி பாவகத்தி இல்லாத எத்தனை பேர்களுடைய வாயிலே இது புகுந்தது என்று தெரியாது; இங்கனே யிருக்கச் செய்தேயும் நியமாதி கிரமத்தாலே பதஞ் செய்யப் பார்த்தாலும் சுக்கான் பருக்கை போலே நெகிழாதேயிருக்கிற நெஞ்சுகளும் இன்று அழிகிறபடி கண்டால் சமகாலத்தில் மரங்கள் இரங்கச் சொல்ல வேணுமோ?’ என்றாராம். இதுவும் நம் சிந்தையில் எழுகின்றது. கண்ணபிரான் புல்லாங்குழல் ஊதும்பொழுது 'மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்; மலர்கள் வீழும்; 25. திருவாய் 6, 5 : 9 26. ஏம்பார். இராமாநுசரின் தம்பி. கோவிந்தபட்டர் என்ற பெயருடன் காளத்தியில் சிவவழிபாடு செய்திருந் திருந்தவர். பின்னர் இராமாநுசரால் ஆட்கொள்ளப்பட்டு வைணவ சமயத்தைத் தழுவியவர்.