பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைவில்லி மங்கலத் தாமரைக் கண்ணன் 있53 இவள் படி இல்லாமையாலே அவர்கள் ஒப்பன் அ; லோக மெல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தி பிறந்தாளோ! என்றுமாம் ” இவள் நெடுமாலென்றே நின்று கூவுமால்: ' என்பக் கலிலே எம்பிரானுக்கு என்ன வியாமோகம்! என்ன வியாமோகம்!’ என்று அவனுடைய வியாமோகத்தின் நெடுமையைச் சொல்லிக் கூப்பிடுகின்றாள். கொண்ட வென் காதல் உரைக்கில் தோழி, மண்டினி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்' என்று தானே பேசும்படியான அபரிமிதமான தன் வியாமோ கத்தை மறந்து எம்பெருமானின் வியாமோகத்தைக் கனக்கப் பேசுவதையும் காண்கின்றோம். தன்னுடைய வியாமோகத்திற்கும் கிருஷி பண்ணுகைக்காக முற். பட்டு வந்து என்ற குறிப்பு முன்னிவந்து என்ற சொற்றொடரில் தொனிப்பதையும் எண்ணுகின்றோம். இங்ங்னம் எண்ணிய வண்ணம் திருக்கோயில்களில் நுழைந்து தேவபிரான், அரவிந்தலோசனன் (தாமரைக் கண்ணன்), கருந்தடங்கண்ணி நாச்சியார் இவர்களைச் சேவிக்கின்றோம். தேவபிரான் நின்ற திருக்கோலத்திலும் அரவிந்தலோசனன் வீற்றிருந்த திருக்கோலத்திலும் காட்சி நல்குகின்றனர். இரு எம்பெருமான்களும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் திகழ்கின்றனர். நம் உறவினர்களாக நினைத்திருக்கும் அனைவரும் போலி உறவினர்களே எனவும், எமபெருமான் ஒரு வனே உண்மையான உறவினன் எனவும் கூறப்பெறும் மெய்ப் பொருள் உண்மையை நினைவு கூர்கின்றோம். ஆழ்வாரும் திருக்கடைக் காப்புப் பாசுரத்தில் இதனையே குறிப்பிடுவதையும் சிந்திக்கின்றோம்,

  • சிந்தை யாலுமசொல் லாலும் செங்கையி

னாலும் தேவபி ரானையே 29. திருவாய் 7, 3 . 8