பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் ஊரும் அல்ல. இது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த. நான் குநேரி வட்டத்தின் தலைநகராக விளங்குகின்றது. நம்மாழ்வார் காலத்தில் நான்மறைகளைக் கற்றுத் தெளிந்தவர்கள் பலர் இந்த ஊரில் வாழ்ந்திருக்க வேண்டும்" தெள்ளியார் திருநான் மறைகள் வல்லாச் மலிதண் சிரீவர மங்கை' என்ற பாசுர அடி இதனைத் தெளிவாக்கு கின்றது. அந்தத் திருத்தலத்தில் வேள்விகள் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதைச் செந் தொழிலாவர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கல தகர்': என்ற பாசுர அடியினால் அறிகின்றோம். இதனைத் தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்: என்ற அடி மேலும் அரண்செய்கின்றது. பேருந்து நிலையத்தினில் இறங்கிக் கோயில் வாயிலை அடைகின்றோம். முதலில் நாம் காண்பது பந்தல் மண்டபம். அதையொட்டிய உயர்ந்த மண்டபங்களில் தங்க ரதம், தங்க சப்பரம் முதலியவை பாதுகாப்பாக வைக்கப்பெற்றுள்ளன. பங்குனி உத்தரத் திருவிழாவில் இவை இறைவனை ஏற்றிக்கொண்டு தெருவில் உலா வருதலைக் கண்டு மகிழலாம். கோயில் ஆட்சியாளர் தயவு இருந்தால் கதவுகளைத் திறந்து இவைகளைக் காட்டும்படி ஏற்பாடு செய்யலாம். பந்தல் மண்டபத்தின் வடபகுதியில் வானமாமலை சீயர் மடம் உள்ளது. அந்த மகான் பிரசித்திப் பெற்றவர்; அவரைக் கண்டு சேவித்துத் திரும்பலாம். இராச கோபுரம் வாயிலைக் கடந்ததும் கோயில். உள்ளேயே நுழையலாம். கோயில் வாயிலைக் கடந்து. செவந்தி மண்டபம் என வழங்கப்பெறும் ஒரு மண்ட் பத்தை அடைகின்றோம். இது செவந்தி நாயக்கர் என்பவரால் கட்டப் பெற்றது. இவர் பக்தியுடன் செய்த } 2. ഒു 5.7:9 18. 6; 5.7:7 1 4. ഒു 5.7:4