பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் காண்கின்றோம். இவருக்கு இரு மருங்கும் பெரிய பிராட்டியாரும் பூமிப்பிராட்டியாரும் இருக்க ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசிக்கொண்டு நிற்பதையும் பார்க்கின்றோம். தங்கமயமான ஆதிசேடன் எம். பெருமானுக்குக் குடைபிடிக்கும் நிலையில் இருப்பதையும் கண்ணுறலாம். இந்தக் காட்சி பரமபத நாதன் வைகுந்தத் தில் இருக்கும் இருப்பை நினைவுறுத்துகின்றது. பிருகு முனிவர் மார்க்கண்டேய முனிவர், சந்திர சூரியர், விஷ்வக்சேனர் முதலிய பதினொரு பேர் ஏகாசனத்தில் இருக்கும் காட்சி கண்களுக்கும் உணர்ச்சிக்கும் பெருவிருந் தாக அமைந்திருப்பதை அநுபவித்து மகிழலாம். இன்றும் இம் மூல மூர்த்தியைச் சுற்றி ஒரு பிராகாரம் உள்ளது. அங்குத்தான் உரோமமுனி,வைகாசன முனி முதலியமுப்பத் திரண்டு முனிவர்கள் உள்ளனர். தும்பிக்கை ஆழ்வாரும் அவர்களின் நடுவே உள்ளார். இத்திருக் கோயிலில் உள்ள மூலவர்கள் அனைவரும் அன்று ஏரியின் நடுவிலிருந்த பெரும் பாறையிலேயே வடிக்கப் பெற்றவர்கள் என்ற செய்தியையும் நாம் அறிகின்றோம். நம்மை அறியாமல் பரவசப் படுகிறோம். ஆழ்வார் பாசுரங்கள் நம் மனத்தில் எழ அவற்றில் ஆழங்கால் படுகின்றோம். எம்பெருமான் தனக்கு கம் காட்டாமை யால் ஆழ்வார் படுகின்ற ஆர்த்தியெல்லாம் நம் நினைவிற்கு வருகின்றது. கோற்ற கோன்பிலேன் நுண்ணறி விலேன் ஆகிலும் இனி யுன்னைவிட்டு, ஒன்றும் ஆற்றகிற் கின்றிலேன் அரவினனை அம்மானே' (நோற்ற-அநுட்டித்த, நோன்பு-கருமயோகம்; நுண் அறிவு-ஞான யோகம்; என்பது அவர் திருவாக்கு. மூன்று யோகங்களையும் செய்யவில்லை. இங்ங்னமே கைம்முதலற்றவனே யாகிலும், 15. திருவாய் 5. : .