பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானமாமலைத் தோத்தாத்திரிநாதன் 265 என்ற ஆழ்வாரின் அநுபவத்தைக் காண்க. பாண்ட வர்க்கட்குப் பட்சபாதியாக இருந்து மாயப்போர் செய்து நூற்றுவரை ஒழித்தாயன்றோ? இஃது அடியார்களைக் காக்கும் தொழிலன்றோ?' என்கின்றார். மாயப்போர்’ என்பதற்கு ஈடு: ஆச்சரியமான யுத்தமென் லுதல், வஞ்சகமான யுத்தமென்னுதல், அதாவது இரவைப் பகலாக்கியும் ஆயுதம் எடேன்' என்று ஆயுதம் எடுத்தும், சத்துருக்கர் உயிர் நிலையைக் காட்டிக் கொடுத்தும் செய்தவை. நிலங்கண்ட அம்மானே!" என்று ஆதிவராக அவதாரச் செயலிலும் ஈடுபடுகின்றார் ஆழ்வார். 'பிரளயத்தில் ஆழ்ந்த பூமியை அண்டபித்தியினின்றும் விடுவித்த செயல் எக்காரணம் பற்றி! நம்முடைய சரக்கை நாம் நோக்க வேண்டும் என்று செய்ததன்றோ அது? அதுபோல நானும் உன் சரக்கன்றோ?' என்கின்றார். இங்ங்ணம் வேண்டும் ஆழ்வார்; வான மாமலை பே அடி யேன் தொழி வக்தருளே.' என்கின்றார். நான் ஆசைப்பட்டபடியே அடிமை செய்ய லாம்படி வந்தருள வேண்டுங்” என்பது ஆழ்வாரின் வேண்டுகோள். 'வான மாமலை என்பது ஆழ்வார் எம்பெருமானுக்குச் சூட்டும் திருநாமம். விண்ணளவும் சென்று கிட்டும்படி ஓங்கின மலைபோல் இரா நின்ற எம் பெருமானை மலையாகவே கூறுதல் பொருத்தமன்றோ? எம்பெருமானின் திருநாமமே ஊரின் திருநாமமாக மாறி விட்டது. நான்கு நேரி என்ற திவ்விய தேசத்தை வைணவப் பெருமக்கள் வானமாமலை என்றே வழங்கி வருகின்றனர். இந்தச் சந்நிதியில் எம்பெருமானின் பாலனாய் ஏழுலகுண்ட செயலிலும், கொக்கின் வடிவாய் வந்த பகாசுரனை அவன் வாயைப் பிளந்து அவனை முடித்த 20. திருவாய் 5. : 6 21. டிை 5. . 7