பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுங்குடிக் குழக நம்பி 273 அவற்றுள் தென்மேற்கு நோக்கிச் செல்லும் சாலையே குறுங்குடியை அடைவது. சாலை சுமார் தான். திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பணகுடி செல்லும் பேருந்து ஒன்றினை குறுங்குடி வழியே திருப்பியுள்ளனர். ஆகவே, நெல்லையிலிருந்தும் நேராகக் குறுங்குடிக்குச் செல்ல வசதி உண்டு. நாம் பேருந்தில் புறப்பட்டு வருகின்றோம். குறுங்குடி ஒரு சிறிய ஊர் தான். மலையையொட்டிய பகுதியாதலின் இவ்வூர் நல்ல குளிச் சோலைகள் நிரம்பி யிருக்கின்றன. தென் நன் சோலைத் திருக் குறுங்குடி: தேன் கொள் சோலைத் திருக் குறுங்குடி', 'சோலை குழ் தண் திருக்குறுங்குடி' என்ற நம்மாழ்வார் வாக்கு களாலும், 'கொல்லை வளர் இள முல்லை புல்கும் குறுங்குடி', 'கொங்கு அலர் தண்பனை சூழ்புறவின் குறுங்குடி” என்ற திருமங்கை மன்னன் வாக்குகளாலும் இந்த ஊர்ச் சுற்றுப்புறச் சூழ்நிலையினை அறியலாம். மேலும் இந்த ஆழ்வாரின்,

இரவும் பகலும் ஈன்தேன் முரல வண்டெல்லாம் குரவின் பூவே தான்மண காறும் குறுங்குடி’’’ (தேன்.வண்டுகள்; ஈன்-இனிமையான) 'என்றும் இரவும் பகலும்

வரிவண் டிசையாட குன்றின் முல்லை மன்றிடை காறும் குறுங்குடி' (குன்று-மலை; மன்று-நிலம்) 4. திருவாய் 5, 1 : 2 5. ഒു.5. 5 : & 6. ఇన్స్ట్రా ఫ్, 6 :గ్రీ 7. பெரி. திரு, 9. 5 : 6 8. ഒു. 9, 5 : ? 9. பெரி. திரு. 9. 3: 4 10. ഒു. 9, 6: 8 பாதி-18