பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் ஆறுகால பூசை நடைபெறுகின்றது. கோயிலுக்கென மானிய நிலங்களும் இதர சொத்துகளும் உள்ளன. சங்க நூலாகிய நற்றிணையில் 21-ஆம் பாடலைப் பாடிய புலவர் கோட்டியூர் நல்லாந்தையார் என்பவர் இவ் வூரைச் சார்ந்தவரே என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தலத்தில் வடமொழி தென்மொழிப் புலவர்கள் பலர் வாழ்ந்ததாக அறிகின்றோம். கவிஞர் சுப்பராயர் என்ற மாத்துவ அந்தணர் திருக்கோட்டியூர் பிள்ளைத் தமிழ்? என்ற நூலையும், பெருங் கருணை சதாவதானம் முத்தழகர் அய்யங்கார் என்ற புலவர் திருக்கோட்டியூர்க் கலம்பகம்’ என்ற நூலையும் இயற்றியுள்ளதாக அறிகின் றோம். மேலும் பராசரபட்டர் ஆண்டாள்மீது அருளியுள்ள 'நீளாதுங்க' என்று தொடங்கும் வடமொழிச்சுலோகம் இவ்வூரில் இயற்றப்பெற்றதாகவும் அறிகின்றோம். இந்த அறிஞர் செளமிய நாராயணன் மீது கோஷ்டிஸ்தவம்’ என்ற வடமொழி நூலையும் இயற்றியுள்ளார் என்றும் தெரிந்து கொள்ளுகின்றோம். பல பெரியோர்கள் இவ்வூருடன் தொடர்பு கொண் டிருந்ததாக அறியக் கிடக்கின்றது. பெரியாழ்வார் வாழ் வுடன் இத்திவ்விய தேசம் நெருங்கிய தொடர்புடையது. நீ வல்லபனது புரோகிதராகவும் பரமபாகவதராகவும் இருந்த செல்வநம்பி அத்திவ்விய தேசத்தைச் சேர்ந்தவர். 'அல்வழக்கு ஒன்றும்இல்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன் செல்வனைப்போலே திருமாலேகானும் உனக்குப் பழஅடியேன்' 25. திருப்பாவை தனியனாகத் திகழ்வது இதுவே. 36, திருப்பல். 10