பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் திருஅரங்கம் அழகிய மணவாளன் திறத்தில் ஆழ்வாருக்கு உண்டான கழிபெருங் காதலை அவருடைய திருத்தாயார் எடுத்துரைப்பதாக அமைந்ததாய்ப் பாசுரங்கள் அமைந்த பதிகத்தில் திருமெய்யமலையாளன்’ பரகால நாயகியைப் படுத்தும் பாட்டைக் காண்கின்றோம். "கலையாளா அகலல்குல் கனவளையும் கையாளா என்செய் கேன்நான் விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாவோ?’ என்றும், மெய்ய மலையாளன் வானவர்தம் தலையாளன் மராமர மேழெய்த வென்றிச் சிலையாளன் என்மகளைச் செய்தனகள் அம்மனையீர்! அறிகி லேனே!' jகலை-ஆடை, ஆளாதரியாத; கனம்-பொன்; விலை ஆள் வேலைக்காரி, சிலை-வில்) என்ற பாசுரத்தில் ஈடுபட்டு நிற்கின்றோம். என்னை உனக்கே அற்றுத் தீர்ந்த அடியவளாக ஆக்கிக்கொள்ள எண்ணமுண்டா? இல்லையா? சொல்லி விடு' என்று துணிவாகக் கேட்கும் பரகால நாயகியின் பேச்சைக் கேட்கின்றோம். இப்படி இவ்ஸ் மேனி மெலிந்து போகவும் பெரிய பெரிய பேச்சுகள் பேசவும் நேர்ந்தது அப்பெருமான் படுத்தினபாடு என்பதைப் பாசுரத்தின் பின்னிரண்டு அடிகள் தெரிவிக்கின்றன. திருவரங்கத்து அரவணையானும் திருமெய்ய மலையாளனும் ஒருவனே என்ற விசிட்டாதவைத உண்மையும் இப்பாசுரத்தில் பளிச்சிடுகின்றது. அது மட்டுமா? நித்திய சூரிகளின் தலைவனான பரமபத நாதனும் மராமரங்கள் ஏழையும் ஒரம்பால் துளைத்து சுக்கிரீவன் கொண்டிருந்த ஐயத்தைப் போக்கின அவதார மூர்த்தியான இராமபிரானும் அர்ச்சாவதார மூர்த்தியும் 11. பெரி. திரு 5. 5 : 2