பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் 'வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம், தாயின நாயக ராவர் தோழி! தாமரைக் கண்கள் இருந்தவாறு, சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்விய வாகி மலர்ந்தசோதி, ஆயிரம் தோளொ டிலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா!', (வேய்-மூங்கில்; விலங்கல்-குன்று; வையம்-உலகம். தாயின-தாவி அளந்த, செவ்வி-அழகு; அச்சோ. ஆச்சரியம்; அழகிய ஆ-அழகிருந்தவாறு) தோழி, இவருடைய திருக்கண்களின் அழகை என் சொல்லுவேன்? ஓங்கிப் பரந்த மலைகள் போலே விளங்கு கின்ற தோள் வலயங்கள் முதலியவற்றின் புகர் விஞ்சி விளங்கப் பெற்றவையான ஆயிரந் திருத்தோள்களும் அவயவந்தோறும் திருவாபரணங்கள் விளங்கப்பெறும் அழகை என்ன சொல்லுவேன்? இந்த அழகினை நோக்குங்கால் இவர் சாதாரண மனிதராக இருப்பதற்கு நியாயமில்லை. இவர் திருமெய்ய மலையில் எழுந்தருளிய வரும் இவ்வுலகங்களையெல்லாம் இரண்டடியால்தாவியளந்த வருமான எம்பெருமானாகவே இருக்க வேண்டும்’ என் கின்றாள் ஆழ்வார் நாயகி. இங்ங்ணம் திருமங்கையாழ்வார். பெற்ற அநுபவத்தையெல்லாம் அவர் தம் பாடலால் நாம் பெற முயல்கின்றோம். இதற்கும் அவன் அருள் வேண்டுமல்லவா? எம் பெருமானைச் சேவித்த பிறகு தாயார் சந்நிதிக்கு வருகின்றோம். தாயாரின் திருநாமம் உய்யவந்தாள் நாச்சியார் என்பது. அவரையும் வணங்கி அவர் அருளைப் பெறுகின்றோம். 14. பெரி. திரு 9, 2 : 3