பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமெய்யத்து இன்னமுதம் 35 களான கட்டபொம்மனும் ஊமைத்துரையும் இக்கோட்டை யில் ஒளிந்திருந்தனர் என்பது செவிவழிச் செய்தி; இவற்றி லிருந்து திருக்கோயில்கள் மகேந்திரவர்மன் காலத்தில் ஏற்பட்டவை என்பதும், கோட்டை அதன் பின்னர்க் கட்டப்பெற்றது என்பதும் தெளிவாகும். இச் செய்திகளை எல்லாம் அறிந்த வண்ணம் திவ்விய தேச யாத்திரையால் பெற்ற மனநிறைவுடன் காரைக்குடிக்குத் திரும்பு கின்றோம்.