பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புல்லாணி எம்பெருமான் 45 இத்தகைய எம்பெருமான் முன்பு ஒருநாள் வண்டு கள் மதுவுண்ணும் தாழையின் நிழலில் தன் நெஞ்சு மிக்க ஆவல் கொள்ளும்படி பிரிந்து சென்றான். என்று குறிப்பிடுகின்றாள் பராங்குச நாயகி." தன்னைத். தொடர்ந்து கொண்டு பேதாய், இனிமேல் உன்னை என்றும் பிரியேன்” என்று சொல்லிய மகானுபாவன் அப்பெருமான்’ என்பதையும் காட்டுகின்றாள்.' இங் ங்னம் தோழியிடம் கூறிய ஆழ்வார் நாயகி, என்னை நையச் செய்து கொள்வதனால் பயன் என்ன? இங்கே இருந்து கொண்டு கடந்த செயலைச் சிந்திப்பதனால் பயன் என்ன? அவனை தொழுவோம், புறப்படு' என்று திருப்புல்லாணிக்குச் செல்லத் தோழியை ஆயத்தப் படுத்துகின்றாள்.’’ தலைவியிடம் எம்பெருமான் கலவி செய்ததற்கு சான்று பகர்வார் எவரேனும் உளரோ? என்று தோழி வினவ, "கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு’** [கொங்கு- தேன்; கரி-சாட்சி) என்று மறுமொழி பகர்கின்றாள் ஆழ்வார் நாயகி. சான்று பகர்வாரையும் கூட்டிச் சென்று எம்பெருமானை வளைத்து மடக்கிவிடலாம் என்பது தோழியின் நினைப்பு. அடுத்து, அவன் செய்த கலவி முறைகளை விவரிக் கின்றாள். 'பூங்கொத்துகளையுடைய ஞாழல் மலர்களை என் குழலில் சூட்டினான். இனி ஒரு நொடிப்பொழுது பிரிந்தாலும் உயிர் பிரிந்து விடும் என்னும்படியாக அளவுகடந்த அன்பைக் காட்டிப் பரிமாறினான்.அத்தனை யும் பிரிவுக் குறிப்பாகவே செய்தான் போலும். பிரியேன் என்று சொன்ன வாய் மூடுவதற்கு முன்னரே பிரிந்து 31. பெரிதிரு. 9. 3. . 3 33. டிை. 9.3 : 1, 2,6. ഒു. 9, 8 : A .84 قة .3 . 9 ه ي 6 . 32