பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமோகூர்க் காளமேகம் 7; திருமோகூருக்கு வந்ததாகவும், தம்முடைய திருநாட்டுப் பயணத்திற்கு வழித்துணையாகத் திருமோகூர்க் காளமேகப் பெருமாளைப் பற்றியதாகவும் பெரியோர் பணிப்பர். இந்தத் தெய்வச் சிந்தனையுடன் திருக்கோயிலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றோம். திருக்கோயிலைச் சுற்றி நீண்டு உயர்ந்த மதில் அமைந்துள்ளது. மதிலுக்கு வெளியே புஷ்கரிணி உள்ளது. இது கrராப்தி புஷ்கரிணி என்ற திருநாமத்தால் வழங்கிவருகின்றது. இது நம் கண்ணுக்குத் தாளதாமரைத் தடாகமாகவே காட்சி அளிக்கின்றது. தாமரை மலர்களும் மொட்டுகளும் உலகு அளந்த சேவடிபோல் உயர்ந்து காட்டுவதைக் கண்டு மகிழ்கின்றோம். திருக்குளத்தின் தெள்ளிய நீர் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளு கின்றது. திருக்கோயிலுக்குப் புறத்தேயுள்ள இந்தத் தடாகத்தில் கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு சந்நிதிக்குள்ளே திகழும், 'தயரதன் பெற்ற மரகத மணித்தடம்’’’ காண விரைகின்றோம். இந்தத் தடாகத்தைக் காண்ட தற்கு, கண்டு மகிழ்வதற்கு, தொண்டிர் வம்மின்!”* என்றும், அடியிர் தொழு மின்’ என்றும் நம்மாழ்வார் குரல் கொடுத்து அழைப்பதை நம் செவிகள் கேட்கும் அநுபவத்துடன் திருக்கோயிலுக்குள் நுழையச் சித்த மாகின்றோம். எம்பெருமானுக்கும் தடாகத்திற்கும் உள்ள ஒற்றுமையை ஆழ்வாரே பிறிதோரிடத்தில் நிரூபணம் செய்துள்ளது நம் நினைவிற்கு வருகின்றது.

  • கண்கை கால் தூயசெய்ய மலர்களா சோதிசெவ்வாய் முகிழ்தா சாயல்சாமத் திருமேனி தண்பாசடையா தாமரைள்ே வாசத்தடல்போம் வருவானே' எம்பெருமானைக் கிட்டினாரோடு முதலுறவு பண்ணு பவை அவனது தி ரு க் க ண் க ள்; அத்திருக்கண்

13. திருவாய் 10 1:3 14. ഒു. 10. 1:4 13. 64. I0. 1:8 16. 6్క. 8. 5:1