பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

(அ. சொ.) தஞ்சம் - அடைக்கலம், சரண்-திருவடி, பஞ்சவன், தென்னன்-டாண்டியனைக் குறிக்கும் சொற்கள். 3. எண்தி சைக்கெழில் ஆலவாய் மேவிய

அண்டனே அஞ்சல் என்றருள் செய்எனக் குண்ட் ராம் அம ணர்கொளு வும்சுடர் பண்டிமன் தென்னன் பாண்டியற் காகவே.

(அ. சொ.) எண்திசை-எட்டுத்திசைகள், அண்டனேஎல்லா உலகங்களுமாய் உள்ளவனே, குண்டர் - உடற் பருமன் உடையவர், பண்டி-பாண்டியநாடு, பாண்டிய நாடு என்பதன் சிதைவு பண்டி என்பது, மன்-அரசன் ஐயனே அஞ்சல் என்று அருள் செய்' என்று பாடல்தோறும் பாடி வேண்டினர். இக்கருத்தை ஒரு பாட்டில் 'தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேன்' என்று குறிப்பிட்டிருப்பதையும் & TöööTGUssis).

இத்திருப்பதிகத்தின் மூலம், சமணர்கள் சத்தியவான் கள் அல்லர், பொய்யர் ஏமாற்றுபவர் (எத்தர்) இறுமாப் புடையவர் (எக்கர்) துட்டர், கணக்கற்றவர், வஞ்சம் செய் பவர், போற்றுதல் செய்யாதவர், அருளாகிய தூய்மை இல் லாதவர், (சமணர்கள் சீவகாருண்யம் உடையவர் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் அக் கொள்கையுடையவர் என்பது உண்மையானல் சம்பந்தர் திருமடத்திற்குத் தீ வையார், அன்ருே? ஆகவே அவர்கள் அருள் துா இலா அமணர் என்று சம்பந்தர் சாற்றி அருளியதில் தவறு இல்லை என்க) உடற்பருத்தவர் என்பன போன்ற குறிப் புக்கள் அறியவருகின்றன.

திருஞானசம்பந்தர் இதே சமயத்தில் பாண்டியன் இயல்புகளையும் இதன் மூலம் நமக்கு அறிவிக்கின்றனர். அவன் சைனத் துறவிகளிடத்தும், அச்சமயத்தினிடத்தும் பற்றுடையவன் என்பன அறிய வருபவை.