பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1?

4. அப்பன் ஆலவாய் ஆதி அருளினுல்

வெப்பம் தென்னன் மேல்உறை மேதினிக் கொப்ப ஞானசம் பந்தன் உரை பத்தும் செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே. (அ.சொ.) மேதின்ரிக்கு-உலகிற்கு, செப்பசொல்ல. இத் தேவாரப்பதிகம், திருஞானசம்பந்தர் மதுரைத் திருமடத்தில்எழுந்தருளி இருந்தபோது இவரை அழித்து விடச் சமணர்கள் அம்மடத்திற்குத் தீ வைத்தனர். அதனை அறிந்த சம்பந்தர் மதுரை மன்னனே அச்சுடர் பற்றுக என்று கருதி இப்பதிகத்தைப் பாடினர். இக்கருத்துடன் இப்பதிகம் பாடப்பட்டது என்பதும், சமணர்கள் தம் மடத் திற்குத் தீ வைத்தது உண்மை என்பதும் இப் பதிகப் பாடல்களில் காணப்படும்.

"அமணர் கொளுவும் சுடர், பையவேசென்று பாண்டி யற்காகவே,” என்பன போன்ற தொடர்களைக் காண்க. இப்பதிக ஈற்றுப்பாடலிலும் காண்க. வெப்பம் தென்னன் மேல் உற என்று குறிப்பிட்டிருத்தலும் ஊன்றி நோக்கற். குரியது.

திருஞானசம்பந்தர் சுந்தரேசப்பெருமானேயே தஞ்சம் என்று கொண்டிருந்ததல்ை, மங்கையர்க்கரசியார் குலச் சிறையாருடன் திருஞானசம்பந்தர்புறப்பட்டு இத்தலத்தை வணங்கியபோது இப்பதிகம் பாடப் பட்டது.

இப்பதிகத்தில் ஒருவர்க்கொருவர் பகையுடையவர் களும் இறைவனே அடைந்தால் பகை ஒழிந்து ஒருமனப் பட்டு வாழ்வர் என்பது, "திங்களும் பாம்பும் திகழ்சடை' என்ற அடிகளில் இருந்து தெரியவருகிறது. இப்பதி இறை வர்க்கு இனிதாக உள்ளதுபோலும். இதனே, "இனிதுறை கோயில் பரங்குன்று’ என்ற குறிப்பால் அறியலாம்.

இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்ட திருப்பரங்குன்றம் கோங்கு, மாதவி,மல்லிகை முதலான மலர்களைக் கொண்ட சாலையுடையது. வண்டுகள்ஒலிக்கும் சோலைகளையுடையது.