பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கன்னகராவும் உள்ளது. மேலும் ஆண் மயிலும் பெண் மயிலும் ஒன்ருேடொன்று தழுவி இன்பமாக நடமாடும் சோலகளையும், வண்டின் பாடலும் நீங்காத இடமாகவும் அமைந்தது.

மாறன் பத்திவைத்தவன், வித்தியாமண்டபம் வைத்து, அறிஞர்களோடு அளவளாவுபவன், தமிழ் மொழியிடத்து அன்புவாய்ந்தவன், குற்றம் இல்லாதவன் என்றும் கூறி அருளினர். இவனும் தீ வைக்க உடன்பட்டிருந்தான் என் பதைச் சுடர் பாவினன் தென்னன் என்ற தொடராலும் வெளிப்படுத்தினர்.

இப்பதிகத்தின் மூலம் திருஞானசம்பந்தர் இப் பாண்டியனிடத்து இரக்கம் கொண்டமையும் விளங்கு கிறது. இல்லையானல், "அமணர் கொளுத்திய தீ பையவே (மெல்லவே) சென்று பாண்டியற்காகவே” என்று கூற மாட்டார் அல்லவா? மேலும் பாண்டியன் மனேவியாரான மங்கையர்க்கரசியார் பால் வைத்த அன்பும் இவ்வாறு கூறக் காரணமாயிற்று.

மதுரை இறைவர் திருப்பெயர் சொக்கன் என்பது இப்பதிப்பகத்தால் தெரிகிறது, இதுவே சுந்தரேசன் என்று மொழி பெயர்க்கப்பட்டது. தமிழ்மொழிபண் பொருந்தியது என்பதை "பண்ணியல் தமிழ் என்ற தொடர் உணர்த்தி கிற்கின்றது. ஆகவே, இசைக்குப் பொருத்தமான மொழி தமிழ் என்பதையும் உணர்வோமாக.

இப்பதிகத்தின் ஈற்றுப் பாடல், இப்பதிகத்தில் காணப் படும் பத்துப் பாடல்களேயும் சொல்லவல்லவர் குற்றமற்ற செல்வத்தை யுடையவராவர் என்று அறிவிக்கின்றது. மேலும், அமண கொளுவிய சுடர் பாண்டியனைப் பற்றச் செய்யலாமோ என்று உலகம் கேட்காத வண்ணம் உலகம் ஒப்புக்கொள்ளும் வகையில் இக் கருத்துடன் இது கூறப் பட்டது என்பதை உணர்த்தவே திருஞானசம்பந்தர் "மேதி