பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

2. நம்ப னேநான் முகத்தாய் நாதனே ஞான மூர்த்தி

என்பொனே ஈசா என்றென் றேத்திநான் ஏசற்றென்றும் பன்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம் அன்பனே ஆல வாயில் அப்பனே அருள்செய் யாயே. (அ. சொ.) ஏத்தி-போற்றி, ஏசற்று-ஆசைப்பட்டு. இப்பதிகத்தில் அப்பர் பெருமான் தமக்கு அருள்புரியு மாறு வேண்டிக்கொள்கிருர். இவருக்கு மீண்டும் பிறவி வருதல் கூடாது என்பது அவாவாகும். இதனை 'இனிப் பிறவாவண்ணம் அருள் செய்” என்ற வேண்டுகோளால் அறியலாம். இறைவன் தான் மருந்தாய் இருந்து, வல்வினை களேத் தீர்க்கும் இயல்பினன் என்றும் இப்பதிகத்தால் உணரலாம். அப்பர் பேரறிவு படைத்திருந்தும், தமக்கு இயல்பாக அமைந்த கற்றறிந்து அடங்கலாகிய அருங் குணத்திற்கு ஏற்ப, சாலஞானம், கற்றறிவில்லாத நாயேன் என்றும் கூறிக்கொள்வதைக் காண்க. திருநாவுக்கரசர் சின்னாள் சமண சமயம் சார்ந்திருந்தபோது, இறைவர் எண்ண மின்றி இருந்தமையால், அக்காலத்தை எண்ணி, "பண்டு உனே கினேயமாட்டேன்' என்றும் குறிப்பிடுகிருர், இறைவன் திருவடியே புகலிடம் என்பதை 'எஞ்சல் இல் புகல் இது" என்றும் அருள் செய்கிருர், அப்பருக்குத் தொண்டின்மேல் இருக்கும் விருப்பத்தை 'வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டன்’ என்றும் "நறு மலர் நீரும் கொண்டு நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச் செறிவன சித்தம் வைத்துத் திருவடிசேரும் வண்ணம்' என்றும் கூறிய அடிகளால் அறியலாம்.

சிலந்திப் பூச்சி இறைவர் திருமேனிக்குமேல் கூடுகட்டி

வாழ்கையில் அக்கூடு தம்மீது வெய்யில்படா திருக்கக்

கட்டப்பட்டதாக இறைவர் எண்ணி அதன் மாட்டு

அருள்காட்டி அதனை அடுத்த பிறவியில் அரசகைத்

திருவருள் புரிந்தார் என்பதை, 'கலந்திகழ் வாயில்

3