பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

(அ.சொ.) தூயானே-பரிசுத்தனே, தூ-தூய்மையான, ஏற்ருன் - இரடபத்தை யுடையவன், திங்கள் - சந்திரன், சேயானே-அப்பாற்பட்டவனே.

இப்பதிகத்தில் மதுரைத் திருவாலவாய்ப் பெருமான் முன்னேப் பழம் பொருட்கும் முன்னேப் பழம் பொருளாய் இருப்பவன் என்பதை ஆணித்தரமாக 'முளேத்தானே எல்லார்க்கும் முன்னே தோன்றி' என்ற சீரிய கருத்து அறிவிக்கப்படுகிறது. இறைவர் முப்புரங்களே எரிக்க மேருமலையை வில்லாகவும், வாசுகியாகிய பாம்பை வில்லின் காணுகவும் கொண்டார்.

இடி இடித்தற்கும் இறைவனே காரணன் என்பதை இப்பதிகம், "கால் திரளாய் மேகத்தின் உள்ளே கின்று கடுங்குரலாய் இடிப்பானே' என்று கூறுகிறது; இறைவன் அடியவர்க்கு எளியவயுைம் பிறர்க்கு அரியவனயும் இருப் பவன் என்பது 'பிறர்க்கு என்றும் அரியான்" என்னும் தொடர் விளக்குகிறது. இறைவர் திருப்பாற்கடலுள் எழுந்த விடத்தை உண்டிலர் எனில் தேவர்கள் அமுதம் பெற இயலாது. ஆகவே அவர்கட்கு அமுதம் ஈந்த கருணை இறைவர்பால் இருந்தமையின், 'அமரர்களுக்கு அமுது ஈந்தானே” என்ற அருளிப் பாட்டை அறிவித்தனர். அப்பர் இதனே நன்கு விளக்கி, "விண்னேர் நடுங்கக் கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த தேவனே' என்றும் அறிவித்துள்ளார். இறைவன் திருவடிப் பற்றைத் தவிர்த்து வேறு பற்று அற்றவர் அடியார் என்பது "மற்று ஒருபற்று இல்லா அடியார்” என்னும் அடியால் புலனுகின்றது. இறைவன் அன்பர்களின் கருத்தறிந்து அக்கருத்தை முற் றுப்பெற வைப்பவன் என்ற அவனது கருணேத்திறத்தையும் அப்பர் போற்றினர்; இவன் கருணையின் திறத்தை மேலும் வற்புறுத்த 'எல்லார்க்கும் அருள் செய்வானே' என்ற தொடராலும் குறிப்பிட்டனர். அப்பருக்கும் அரர்ைக்கும்