பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இப்பதிகம் சுந்தரரால் திருப்பரங்குன்றத்தின் மீது பாடப்பட்டது என்பதற்கு ஏற்ற குறிப்புப் பாடல்தோறும் இல்லை என்ருலும் இப்பதிக ஈற்றுப் பாடலில், "பரங் குன்றம் மேய பரமன்' என்று குறிப்புக் காணப்படுதல் கொண்டு, இது திருப்பரங்குன்றத்தில் பாடப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். இத்துடன் இப்பதி கத்தின் தொடக்கப்பாடல் கோத்திட்டையும் என்று தொடங்கப் பெறுதலினல், கோத்திட்டை என்பது திருப்பரங்குன்றத்திற்குரிய பெயர்களுள் ஒன்ருக இருக்கக் கூடும் என்பதும் ஊகிக்கப்படுகிறது. ஈற்றுப் பாடலால் இப்பதிகமானது மூவேந்தர் முன் இவ்வாலயத்தில் பாடப் பட்டதாகும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. அப்போது உடன் இருந்த சேரமன்னர் சேரமான் பெருமாள் காயனர் ஆவர். ஆனால், சோழர் யாவர், பாண்டியர் யாவர் என் பதனே அறிந்து கொள்ளுதற்கு இல்லை; மேலும் இவ் வீற்றுப் பாடலால் இப்பதிகத்தில் அடங்கிய பதிைெரு பாடல்களையும் படித்துக் கற்று வல்லவர் அடியவர்களாவர் என்பதும், திருப்பரங்குன்றப் பரமன் திருவடிக்கே குடியாகும் பேறுபெறுவர் என்பதும், தேவர்கட்குத் தலைவர் ஆவர் என்பதும், சிறந்த மன்னராகும் பேறுபெற்றுத் தேவலோகம் முழுமையையும் ஆளும் வாய்ப்பினேயும் பெறுவர் என்பதும் அறியக் கிடக்கின்றன.

சுந்தரர் இறையவர்க்கு நெருங்கிய தோழர் ஆவர். அத்தோழமை உரிமை இருப்பதனால் இறைவரோடு தோழ மைப் பேச்சில் "இறைவ! உனக்கு அடிமை செய்ய அஞ்சு கின்ருேம், அஞ்சுதற்குரிய குறிகள் உம்மிடம் உள்ளன' என்று ஏளனம் செய்வது போலப் பாடப்பட்டிருக்கும் கருத்தை உன்னி உன்னி காம் இன்பம் அடையவேண்டியவ ராவோம். இப்பாடலில் நகைச்சுவைக் குரிய குறிப்புக்கள் கிரம்பி இருக்கின்றன.