பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

அஞ்சுதற்குரியனவாகச் சுந்தரர் இப்பதிகத்தில் குறிப் பிடுவன, "மேடுகளைக் குத்தித் தெருவே திரியும் எருது உம் பால் உள்ளன. பூதகணம் உம்பால் உண்டு. நீரும் தோலைக் கட்டிக்கொண்டுள்ளிர், பாம்பினைக் கையிலும், கண்டத் திலும், தோளிலும் கட்டியுள்ளிர், விஷம் உண்டுள்ளிர், புலால் காற்றம் வீசும் வெண்டல உம்மிடம் உண்டு, பூத பைசாசங்கள் உம்மைச் சூழ்ந்துள்ளன; எந்த கேரமும் உம் மனேயாளுடன், இணைந்து அவளை விட்டுப்பிரியாது இருக்கின்றீர். உம் பாம்புக்குப் படம் ஐந்து உண்டு. சுடு காட்டில் நடமாடும் இயல்பினரீர்” என்பன போன்றவைகள்,

தோழமை காரணமாகப் பேசும் உரிமை சுந்தரர் பெற்றிருந்தார் என்பதை "பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம்” "பஞ்சுண்ட அல்குல் பண மென் முலையாளொடு நீரும் ஒன்ருய் இருத்தல் ஒழியீர்” “எல்லாம் அறிவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன்' 'கண்ணும் மூன்று உடையீர், கண்ணே இருந்தால் அங்கத்து உறுநோய்களே ந்து ஆளகில்லீர்' 'உம் செய்கை எல்லாம் ஆரொடும்கூடா, அடிகேள் இது ஏன்?" என்பன போன்ற அடிகளால் காணலாம்.

இறைவர் எல்லாமாய் இருப்பவர் என்ற உண்மையினே, 'பாரொடு விண்ணும் பகலும் ஆகிப் பணிமால் வரையாகிப் பரவையாகி, நீரொடு தியும் நெடுங்காற்றும் ஆகி நெடு வெள்ளிடையாகி கிலனும் ஆகி” என்ற அடிகளில் காண்க.

இத் திருப்பதிகத்தில் திருக்கோவலூர், கடம்பூர்க்கரக் கோயில், திருவொற்றியூர், அண்ணுமலை, ஆரூர் முதலிய திருத்தலங்கள் இணைத்துப் பாடப்பட்டுள்ளன. திரு வொற்றியூரில் படம்பக்கம் என்னும் பறை கொட்டப் படுதல் சிறப்புப்பற்றிப்படம்பக்கம் கொட்டும் திருஒற்றியூர் என்று அடைகொடுத்துப் பாடப்பட்டுள்ளது. இதல்ை