பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

வேங்கை மலர்களைத் தம் தலையில் தாங்கிக்கொண்டு சென்று குறும்பலா இறைவரை வணங்கும் என்று குறிப் பிட்டது போற்றற்குரியதாகும்.

இறுதிப் பாடலால் இப்பதிகத்தைப் பாடியவர்கட்கும் கேட்டவர்கட்கும் தீவினைகள் நீங்கும் என்பதும், கல்வினைகள் தளரமாட்டா என்பதும் அறியப்படுகின்றன. இறைவர் அம்மையார் முலையை உண்ணுதவராயினும், அவள் முலைப்பாகம் காதலித்த மூர்த்தி என்று இப் பதிகத்துக் கூறியதன் கருத்து உபசார வழக்குப் பற்றி என்க. உண்ணுமுலையாள் அல்லளோ தேவி?

எட்டாம் திருமுறை

திருவாசகம் உற்றுரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டிேன் கற்ருரை யான்வேண்ட்ேன் கற்றனவும் இனிஅமையும் குற்ருலத் தமர்ந்துறையும் கூத்தாஉன் குரைகழற்கே கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே

(அ. சொ.) குரை-ஒலிக்கும், கற்ரு-கன்றையுடைய பசு, (கன்று + ஆ)

14. திருநெல்வேலி

இது பாண்டிய காட்டுப் பாடல் பெற்ற தலங்களில் பதினன்காவது. இவ்வூரில் வேதசன்மர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்ய கெல்லேக் கட்டி வைத்திருந்தார். அதுபோது இவ்வூரில் வெள்ளம் புரண்டது. அவ்வெள்ளத்தில் இங்கெல் அடித் துச்செல்லாதபடி இறைவர் வேலியிட்டுக் காத்தனர். இக் காரணம்பற்றி இத்தலம் நெல்வேலி எனப்பட்டது. இங் குள்ள இறைவர் மூங்கில் அடியில் தோன்றியவர். இதன் காரணமாக இத்தலம் வேணுவனம் என்றும் கூறப்படும்.