பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி
29
சமுமின்றி வெளியிட்டுரைக்க வேண்டுகின்றேன். எல்லார் கொள்கைகளையும் கேட்டு அறிந்து இன்புற அறிவுடையார் பலரும் பொது மக்கள் எண்ணிறந்தாரும் இங்கே கூடியிருக்கின்றனர். அவரவர் பற்றியுள்ள கொள்கைகளில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை யறியவும், அந்நியர் கொள்கைகளின் உட்கருத்துக்களையும் ஒற்றுமைகளையும் அறியவும் இத்தகைய பட்டி மண்டபப் பிரசங்கங்களே சிறந்த வழிகளாம்; அரசர் பற்றிய மதமென்று கருதி எமது மதத்தைப்பற்றிப் பாராட்டவும், நாம் தழுவாமையால் மற்றவற்றை உண்மை யாராய்ந்து கண்டிக்காமல் இழித்துரைக்கவும் எவரும் முற்படலாகாது. உண்மையாராய்ச்சி யொன்றே நோக்கமாக எவரும் வாதம் செய்யலாம்.
“காய்தல் உவத்தல் அகற்றி மொருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்ற குணம்தோன்ற தாதம் உவப்பதன்கண்
என்று புலவர் பெருமக்கள் கூறிய உண்மை இங்குள்ள அறிஞர் பலரும் அறிந்ததே. இனி வாதங்கள் தொடங்கலாம்.”
சங்கங்கள் சிறிது நேரம் முழங்கின. வேறு பல இயங்களும் இயம்பின. பிறகு பலவகை மதவாதியரும் தத்தம் கொள்கைகளை விரித்துரைக்கலாயினர். வேதத்திற்குப் புறம்பாகவுள்ள சார்வாகரும் சமணரும் பௌத்தரும் முதற்கண் தம் கருத்தை வெளியிட்டனர். பிறகு மற்றவர் தம் கொள்கைகளை விளக்கி யுரைத்தனர்.
இனி மத வாதம் நிகழ்ந்தவாறு சுருக்கி யுரைக்கப்படும்:
சார்வாகர்:-“கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; பஞ்சேந்திரியங்களால் உணரும் உணர்ச்சியன்றி வேறொன்-