உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

57

திருக்கும் எனக்கு ஏற்ற அறவுரை பெரியார் வாக்காற் பிறப்பது எனது மேம்பாட்டுக்கு அறிகுறியாம் அன்றோ ?

முனிவர்:— அன்ப, மாற, நீ முடி சூடிய செய்தி இப்பொழுதே அறிந்தேன். இறைவன் அருள் வயத்தால் எல்லா நலமும் எய்துக ; எல்லா வுயிர்க்கும் இன்பம் வளர்க்கும் இயல்பினன் ஆகுக. அரசின் சிறப்பு அறத்தில் அடங்கும். ஒறுக்கப்படுமாறு வந்து நிற்கும் குற்றவாளியும் ஒறுப்பவனாக இருக்கும் அதிகாரியும் அதற்கு வேண்டிய அறநெறியமைத்த அரசனும் அரசர்க் கரசனாகிய அவன் முன்னிலையில் ஒரு நிகரே. எள்ளளவு தவறு நேரிடுமாயினும் அறம் என்னும் தெய்வம் அதனைக் காத்திருந்த அரசனையே அழித்துவிடும். ஆகையால் அறத்தெய்வத்தின் ஆணை கடவாது நல்வாழ் வெய்த முயல்க.

மாறன்:— முனிவரே, பாண்டிய நாட்டில் பழையதொரு பெருங்குடியாகிய நுமது குடும்பம் இவ்வாறு நும்மோடு முடிவடைகின்றதாயினும், இதுவும் அக்குடிக்கு ஒரு பெருஞ்சிறப்பே. அமைச்சரும் புலவரும் அறநெறி யறிந்த பெரியாரும் கூறும் அறவுரைகளைச் செவியேற்று அரசியல் நடத்தி யான் நமது நாட்டுக்கு நலமியற்ற முயல்வேன் ; எப்பொழுதேனும் அறியாமை அயர்ச்சி முதலிய காரணங்களால் சிறிதே னும் பிறழ்வேனாயின், நும்மைப்போன்ற பெரியோர் தவத்தால் யான் அடையும் பேறு என்னைக் காத்தளிக்கும் என்றே நம்பியிருக்கின்றேன்; மதுரை நகர் செல்கின்றேன்; விடை பெற்றுக் கொள்ளுகின்றேன்.

முனிவர்:— அவ்வாறே செய்க.

இச்சம்பாஷணை முடிந்த பிறகு போர் வீரன் போல வந்த பாண்டிய மன்னன் நன்மாறன் என்பான்