பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பாபு இராஜேந்திர பிரசாத்

எழுதியதற்கேற்றவாறு இராஜேந்திரப் பிரசாத் தேசிய காங்கிரஸ் மகா சபைக்குத் தலைவரானார்.

1906- ஆம் ஆண்டில் இராஜேந்திர பிரசாத் பி.ஏ. பரீட்சையில் தேறினார். அதே ஆண்டில் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் தேசிய மகா சபை தொண்டர் படையில் பாபு பிரசாத்தும் சேர்ந்து சிறப்பாகச் சேவை செய்தார். அந்த மாநாட்டுக்கு வந்திருந்த தலைவர்கள் பலர், இராஜேந்திரர் சேவையைப் பாராட்டினார்கள். அப்போது முதல் அவருடைய கவனம் தேச சேவையின் பக்கம் திரும்பியது.

கல்வியில் அவர் போதிய கவனம் செலுத்தினார் படிப்பில் ஆழ்ந்த, உறுதியான எண்ணம் அவருக்கு இருந்தது. அதனால், பி.ஏ. வகுப்பு வரை நடைபெற்ற தேர்வுகளில் அவர் கல்வியில் புலியாகவே எல்லாருக்கும் காட்சி தந்தார். அவர் எம்.ஏ. வகுப்பில் படிக்கும் போது தேச சேவை அவரை ஈர்த்தது. அதனால் எம்.ஏ. தேர்வி முதல் மாணவராக வரும் வாய்ப்பை அவர் இழந்தார். இந்த நேரத்தில் இராஜேந்திரரின் தந்தையார் மகாதேவ தேசாய் இறந்து விட்டதால், அவர் மீள்முடியாத துன்பமடைந்தார்; சோகமே உருவமானார்.

இராஜேந்திரர் வீட்டார் அவரை ஐ.சி.எஸ். படிக்க லண்டனுக்கு அனுப்பிட விரும்பினார்கள். ஆனால்,பாரிஸ்டராக பாபு விரும்பினார். சூழ்நிலை அவருக்கு சரியாக அமையாததால், அவர் எண்ணம் நிறைவேறாது போயிற்று.