பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

111

அதன் பின்னர், குடல் உளைச்சல் நோய்க்குச் சிகிச்சை அளிக்கப்படும். மற்ற நோய்கள் இருந்தால் குடல் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் குடல் உளைச்சல் நோய் இருந்தால் எந்த பாதிப்பும் தெரியாது.

வேறுபாடு என்ன? : பிற குடல் நோய்களுக்கும், குடல் உளைச்சல் நோய்க்கும், சில வேறுபாடுகள் உள்ளன. அடிக்கடி மலம் கழிக்கும் பழக்கம், குடல் உளைச்சல் நோய்க்கு ஒரு முக்கிய அறிகுறி. ஆனால், பிற குடல் நோய்களுக்கு, இரவில் பாதித் தூக்கத்தில் எழுந்து மலம் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால், குடல் உளைச்சல் நோயால், இரவில் தொந்தரவு இருக்காது. அது போல் அல்சர் இருந்தால், மலத்தில் கண்ணுக்குத் தெரியாமல் ரத்தக்கசிவு இருக்கும். இது மலச் சோதனையில் தெரிந்து விடும். ஆனால் குடல் உளைச்சல் நோய் இருந்தால், ரத்தக் கசிவு இருக்காது.

சிகிச்சை என்ன? : குடல் தொடர்பான நோய்கள் (அப்பன்டிசைட்டிஸ், புற்று நோய், அல்சர் இல்லை என்று முதலில், நோயாளிக்கு உறுதிப்படுத்த வேண்டும். இதனால், நமக்குப் பெரிய பாதிப்பு இல்லை என்று, அவர் மனத்தில் நம்பிக்கை ஏற்படும். இதுவே நோயின் தீவிரத்தைக் குறைத்துவிடும். பின்னர், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடச் சொல்லலாம். கீரை, பச்சைக் காய்கறிகளில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. அதிகமாக வலி இருந்தால், மருத்துவர்களின் ஆலோசனைப் படி, வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிடலாம். மன உளைச்சல், அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும். மன உளைச்சலால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்தால், மனநல மருத்துவரிடம் நோயாளியை அனுப்பி, ஆலோசனைகளைப் பெற