பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

127

தான், இடுப்பு வலி ஏற்படுகிறது. மாதவிடாய் நின்ற பிறகும், இடுப்புவலி தொடர்ந்தால், அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில், கர்ப்பப் பை, சினைப் பையில் கட்டி இருந்தால், வலி தொடருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஸ்கேன் செய்து உரிய சிச்சை பெறுவது அவசியம்.

பெண்ணின் திருமண வயது21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஏன் ? : பெண்ணுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்; பெண்ணும் திருமணத்துக்குச் சம்மதிக்கக் கூடாது. ஏனெனில், 21 வயதாகும் போது தான், இடுப்பு எலும்புகள், சினைப் பை, கர்ப்பப் பை ஆகியவை, முழுமையான வளர்ச்சி அடைந்து, மகப்பேற்றுக்குத் தயாராகின்றன.

16 வயதிலோ அல்லது 18 வயதிலோ திருமணம் செய்தால், தாய்க்கு உள்ள ஊட்டச் சத்துக் குறைவு காரணமாகக் குழந்தையும் சரியாக வளராது. பிரசவத்தின் போது, குழந்தையின் தலை வெளியே வராமல், சிசேரியன் செய்ய வேண்டி வரும். பிரசவத்தைத் தாங்கக் கூடிய அளவுக்கு மனப்பக்குவம் இருக்காது. சாதாரண வலியையே, பிரசவ வலியாக நினைத்து, அழுதுகொண்டே இருப்பார்கள். ஆனால் 21 வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு, எதையும் தாங்கும் மன வலிமையும், மனப் பக்குவமும் ஏற்பட்டு விடும்.

முதல் இரவை முன்னிட்டு : திருமணத் தேதியை முன்னிட்டு, முதல் இரவுக்காக, மாதவிடாயைத் தள்ளிப்போட, மணமகள் மாத்திரை சாப்பிடுவது மிகத் தவறு. மாத்திரை சாப்பிட்ட பின்பு, மாதவிடாய் தள்ளிப்போகும் திருமணம் நடக்கும். அதே மாதவிடாய், மாதச் சுழற்சியிலேயே கருத்தரிக்கும் நிலையும் ஏற்பட்டால், கருவில் உருவாகும் குழந்தை, ஊனமாகப் பிறக்கும் ஆபத்துக்கள் அதிகம். கருத்தரித்த 4-வது மாதத்தில்