பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

பாப்பா முதல் பாட்டி வரை

வாய்ப்பு உண்டா? உறவில் திருமணமே கூடாது என்ற நிலையில், உறவினரின் முட்டை மூலம் பிறக்கும் குழந்தை தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்குமா?

திருமணம் ஆகாத பெண்ணின் முட்டையை எடுத்து, பயன்படுத்துவதால், பின்னர் திருமணமாகும் போது முட்டை கொடுத்த பெண்ணுக்குக் கணவன் மூலம் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படலாம். மாறாக, கணவரின் சம்மதத்துடன், பெண்ணின் முட்டையை வேறு ஒரு பெண்ணுக்குப் பயன்படுத்த முடியும். அண்மையில் குழந்தை இல்லாத பெண்ணுக்கு, அவளது தம்பி மனைவின் கரு முட்டையை எடுத்துப் பயன்படுத்தினேன், கரு உருவானது; ஆனால் கர்ப்பப் பையில் கரு பதியவில்லை.

வேறு ஒரு பெண்ணின் முட்டையை பயன்படுத்தும் போது, குழந்தை இல்லாத பெண்ணுக்கும், முட்டையைக் கொடுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவு முறை, அவர்களது மூதாதையருக்கு இருந்த நோய்கள், ஆகியவை குறித்து தீர விசாரித்த பிறகே, செயற்கைக் கருத்தரிப்பு குறித்து முடிவு எடுக்கிறோம். பரம்பரையாக நோய்ப் பாதிப்பு இல்லாமல் இருந்தால், பிறக்கும் குழந்தையும் பெரும்பாலும் ஆரோக்கியமாகவே இருக்கும்.

9. குழாய்க் குழந்தையைப் பெற கணவனும், மனைவியும் மேற்கொள்ள வேண்டிய மருத்துவமனை நடைமுறைகள் என்ன? சாதாரண கர்ப்பிணிகளுக்குப் பின்பற்றப்படும் நடைமுறைகள் இவர்களுக்கும் பொருந்துமா?

மாதவிடாய் நின்று ஐந்தாவது நாள், மருத்துவமனைக்குப் பெண் வரவேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து, நாள் ஒன்றுக்கு நான்கு ஊசிகள் வீதம், ஹார்மோன் ஊசிகள் போடப்படும். கரு முட்டைகளை உற்பத்தி செய்து வெளியே எடுப்பதற்காக, இதுபோன்று ஊசி போடப்படு-