பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

151

கிறது. எட்டு முதல் 10 நாள்களுக்குள் கரு முட்டைகள், வெளியே எடுக்கப்படும் கருமுட்டையை வெளியே எடுக்கப்படும் நாள் கணவனையும் கட்டாயம் அழைத்து வர வேண்டும். விந்துவைக் கணவன் சேகரித்துத் தர வேண்டும். அதிலிருந்து நல்ல சுறுசுறுப்புள்ள உயிர் அணுக்களைப் பிரித்து எடுத்து, கரு முட்டையுடன் சேர்த்து, அவை கணப்புப் பெட்டியில் (incubator) வைக்கப்படும். 24 மணி நேரம் கழித்து, கரு முட்டையும், அணுவும் இணைந்துள்ளதா எனச் சோதனை செய்யப்படும். இணைந்த கரு மேலும் நன்கு வளர்ச்சி அடைய 48 மணி நேரம் கணப்புப் பெட்டியிலேயே வைக்கப்படும். இரண்டு நாளில் யோனிக் குழாய் மூலம், பெண்ணின் கர்ப்பப் பையில் இணைந்த கரு வைக்கப்படும்.

கருவை வைத்த பிறகு, அது பதியும் வரை, பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிக அசைவுகள் கூடாது. படுத்தே இருந்தால் நல்லது. கருவை வைத்த 10 அல்லது 11-வது நாள், கருவிலிருந்து ரத்தம் எடுத்துச் சோதனை செய்யப்படும். ரத்தப் பரிசோதனையில் பீட்டா எச்.டி.சி.ஜி என்ற வேதிப்பொருளின் அளவு பெருகியிருப்பதைப் பொறுத்து, கர்ப்பம் ஊரிஜிதமாகும்.

இயற்கை கொடுக்காத தாய்மையைப் பெண் பெற்று விடுகிறாள். கரு பதிந்த பிறகு, சாதாரண கர்ப்பிணிகளைப் போன்றே அனைத்து நடைமுறைகளையும், இப் பெண்களும் பின்பற்ற வேண்டும். ஆனால், இயல்பான கருத்தரிப்பைக் காட்டிலும் சோதனைக் குழாய் முறையில் பெண்ணுக்கு அதிக ஓய்வு அவசியம்.

10. சோதனைக் குழாய்க் குழந்தை என்றாலே சிசேரியன் தானா? சுகப்பிரசவத்துக்கு வாய்பு உண்டா?

சோதனைக் குழாய் முறையில் பெரும்பாலும் சிசேரியன்தான்.