பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

163

நுரையீரல்-இதயத்துக்கு இடையே, சுத்த அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்கள், இடம் மாறி இருத்தல், போன்ற கோளாறுகளுடன் குழந்தைகள் பிறப்பது உண்டு.

இதயக் கோளாறுகளுடன் குழந்தை பிறந்து விட்டால், குழந்தை வளர வளர சில கோளாறுகள் தானாகவே சரியாகி விடும். சில சமயங்களில் கருவில் இருக்கும்போது குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருந்தாலும் கூட பிறந்தவுடன் தானாகவே மூடிவிடும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், கோளாறு தீவிரமாக இருந்தால், அறுவை சிகிச்சை தான் தீர்வு.

இதய அறுவை சிகிச்சை ஆபத்தானதா? : இதய அறுவை சிகிச்சை ஆபத்தானதுதான். ஆனால் அறுவை சிகிச்சை செய்யாமல், குழந்தை உயிர் வாழ்வதற்கு உத்தரவாதம் இல்லை. எவ்வளவு நாள் என்ற கேள்விக் குறியுடன் தான் குழந்தை உயிர்வாழ முடியும் எனவே, அறுவை சிகிச்சை செய்யும் முடிவை, தைரியமாக எடுத்து, தீவிர கவனத்துடன் செய்தால், குழந்தைக்கு மறுவாழ்வு நிச்சயம் கிடைக்கும்.

அறிகுறிகள் : இதயக் கோளாறுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, மூச்சு முட்டும். சரியாகப் பால் குடிக்காது, வளர்ச்சி இருக்காது. வறட்டு இருமல் இருந்துகொண்டே இருக்கும். நோய் தீவிரமாக இருந்தால், அறிகுறிகளும் தீவிரமாக இருக்கும்.

இடம் மாறும் ரத்தக் குழாய்கள்: ரத்தத்தைச் சுத்தம் செய்ய இதயத்துக்கு அனுப்பும் பணியை, நுரையீரல் செய்கிறது. நாம் சுவாசிக்கும் போது கிடைக்கும் ஆக்சிஜன் கலந்த சுத்த ரத்தத்தை, நுரையீரல் அனுப்புகிறது. இவ்வாறு சுத்தம் செய்வதற்காக, ‘பல்மினரி ஆர்ட்டரி’ என்ற ரத்தக் குழாய் மூலம், அசுத்த ரத்தம் நுரையீரலுக்கு வந்து சேருகிறது.