பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

173

மூக்கே பிரதானம்: காது, மூக்கு, தொண்டையில் மூக்கே பிரதானமான உறுப்பு. ஏனெனில், மூக்கில் உண்டாகும் நோயின் அடிப்படையிலேயே, காதிலும், தொண்டையிலும், நோய்கள் ஏற்படுகின்றன.

தொந்தரவுகள் எதுவும் இல்லாத போது, மூக்கு என்ற உறுப்பே, நமது கவனத்துக்கு வருவதில்லை. ஆனால், சாதாரண சளி ஏற்பட்டாலே, மூக்கடைப்பு, தலைபாரம் உண்டாவதால் ஒருவருக்குப் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது.

சளி நீடித்தால் : இந்தச் சாதாரணச் சளி, வைரஸ் கிருமிகளால் உண்டாகிறது. சாதாரணமாக, ஒரு வாரம் வரை பாதிக்கப்பட்ட நபர், இந் நோயின் பிடியிலிருந்து, பிறகு மருந்து கொடுப்பதாலோ, அல்லது கொடுக்க விட்டாலோ, தானாக உடலில் எதிர்ப்புச் சக்தி வருவதால், குணமாகிவிடுகிறார். ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேல் சளி நீடித்தாலோ அல்லது மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை பாதித்தாலோ, அந்த நபரின் மூக்கு, மற்றும் சைனஸ் பாகங்களில் குறைபாடு இருப்பதாகச் கொள்ளலாம்.

சைனஸ் பிரச்சினைக்குக் காரணம் : இதுபோல, மூக்கில் உண்டாகும் குறைபாடுகளுக்கு, மூக்குத் தண்டு வளைவு (Deviated Nasal Septum) சைனஸ் பாகங்களில் இயற்கையான, மூக்கிற்கும், சைனஸிற்கும் உண்டான துவாரங்களில் அடைப்புப் போன்றவை காரணங்களாகும். இதுபோன்ற குறைபாடுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, பூரண குணமடையலாம். மூக்கு, சைனஸ் பாகங்களுக்கு இடையிலுள்ள, இயற்கையான துவாரங்கள் அடைப்பட்டுப் போவது, மீண்டும், மீண்டும் சைன ஸைட்டில் (Sinusitis) வருவதற்குக் காரணமாகும்.