பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பாப்பா முதல் பாட்டி வரை

சீழ் கட்டிக்கொண்டு, கொப்பூழ் வழியே நச்சுக் கிருமிகள் உள்ளே சென்று, கல்லீரலைப் பாதிப்பதாலும் காமாலை ஏற்படலாம். இதைத் தவிர சில குழந்தைகளுக்குப் பாரம் பரியமாகவே ஒருவிதக் காமாலை நோய் ஏற்படக்கூடும்.

சிகிச்சை : பாரம்பரியமாக வரும் காமாலை நோயும், பிறவியினால் ஏற்பட்ட கோளாற்றின் பயனாகப் பித்த நீர்க் குழாயில் ஏற்பட்ட காமாலை நோயும், பெரும்பாலும் மிகவும் கொடியவை; சிகிச்சை செய்யும் முன்பே, குழந்தையின் உயிருக்குக் கேடு விளைவிக்கும் வகையைச் சேர்ந்தவை. அசீரணத்தினால் ஏற்படும் காமாலையைத் தக்க சிகிச்சையால் குணப்படுத்த முடியும். ஒரு தேக்கரண்டி அளவு ஆமணக்கெண்ணெய் பேதிக்குச் கொடுத்தால், அசீரணம் சரியாகி, நோயும் சட்டெனக் குணமடைந்து விடுகிறது. பார்க்க : காமாலை.

வாய்ப்பூட்டு நோய்: (Tetanus) அபூர்வமானதொரு நோய். பிரசவ சமயத்தில் தகுந்த மருத்துவ உதவி இல்லாவிடில், குழந்தைகளுக்கு ஏற்படலாம். கொப்பூழ்க் கொடியை அறுக்கக் கையாளும் கத்தரிக்கோல் தூய்மை யாக இல்லாவிடினும், கொப்பூழ்க் கொடியில் உள்ள காயத்தை நன்றாக மூடி, மருந்து வைத்துக் கட்டிப் பாதுகாக்காமல் கிருமிகள் எளிதாக வந்து குடிகொள்ளுமாறு அசட்டைகயாகப் புறக்கணித்து விட்டாலும், வாய்ப்பூட்டு என்னும் நோய் ஏற்படலாம். இதை உடனே கவனிக்காவிடில், உயிருக்கு அபாயம் ஏற்படும்.

நோய்க்கிருமி : பிறந்த ஏழு அல்லது பத்து நாட்களுக்குப் பிறகு, குழந்தை வாயைத் திறக்க முடியாமல், மூச்சுவிடச் சிரமப்பட்டுக் கையையும், காலையும் இழுத்துக் கொண்டு வலிப்பினால் சிரமப்படும். தாடை, கழுத்து, மார்பு, வயிறு இவைகள் மீது உள்ள தசை மிகவும் கடினமாகக் கைக்குத் தென்படும்.