பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

35

அசீரணம் : குழந்தைப் பருவத்தில், அசீரணம் மூன்று வகைப்படும். 1. இரைப்பை அசீரணம் (a) தீவிரவகை. (b) அடிக்கடி ஏற்படும் மிதமான ஒரு வகை. 2. ஈரல் அசீரணம். 3. குடல் அசீரணம்.

இரைப்பை அசீரணம் : (a) தீவிரமானது : இதைச் சாதாரணமாக வயிறு கெட்டுவிட்டது. பித்தம் கொண்டுவிட்டது என்று கூறுவார்கள்.

காரணம் : பழுக்காத காய்கள், தேங்காய் முதலியவைகளை அளவுக்கு மீறி உண்பது.

நோய்க்குறி : அசீரணப்படுத்தும் உணவு வகைகளை உண்ட சில மணி நேரத்தில், குழந்தை வயிற்று நோவில் துடித்துக்கொண்டு, வாந்தி எடுக்கும். சில சமயம் காய்ச்சலும் சேர்ந்து காணப்படும்.

சிகிச்சை : நோயாளியைப் பட்டினி போட்டுவிடுவது நல்ல சிகிச்சை முறை. வாந்தி எடுத்தவுடன் வயிற்று நோவு நின்றுவிடும். ஒரு கிராம் அளவு சோடா உப்பை, இருபது அவுன்ஸ் நீரில் கரைத்து, அந்த நீரை ஒரு தேக்கரண்டியளவு பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கொடுக்கவேண்டும். எனிமா கொடுத்து குடலைச் சுத்தப்படுத்திவிட்டு, வயிற்றின் மீது வெந்நீர்ப்பை வைத்து ஒத்தடம் கொடுத்தால், நோவு குறையும். குழந்தை ஒருமுறை வாந்தி எடுத்த பின்பு, பிஸ்மத்துப் போன்ற மருந்துகளைக் கொடுப்பது நலம்.

அடிக்கடி ஏற்படும் மிதமான அசீரணம் : காரணங்கள் 1. தீவிர அசீரணம் குணமாகாமல், பிறகு அடிக்கடி தோன்றித் தொந்தரவு கொடுக்கலாம். 2. சிலவகை உணவுப் பொருள்கள், குடலின் உட்புறத் தோலுக்குத் தொந்தரவு கொடுப்பதனால் இந்த வகை அசீரணம் ஏற்படலாம். 3 அஸ்கா-சர்க்கரை அதிகம் கலந்த தித்திப்புப் பண்டங்கள். 4.