பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

பாப்பா முதல் பாட்டி வரை

கர்ப்ப காலத்தில்: கர்ப்ப காலத்தை முதல் மூன்றுமாதம், மத்திய மூன்று மாதம், இறுதி மூன்று மாதம் எனப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறையும் ஸ்கேன் எடுப்பது நல்லது. ஸ்கேன் எடுப்பதால் கர்ப்பப் பையில் உள்ள குழந்தைக்குக் கதிர்வீச்சுப் பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்து உள்ளது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் எந்தப் பாதிப்பும் கிடையாது.

கருவின் இடத்தை உறுதி செய்ய : முதல் மூன்று மாதங்களுக்குள் ஸ்கேன் எடுப்பதால், கரு எங்கே உருவாகி உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். சில நேரங்களில், கர்ப்பக் குழாய்களில் கரு உருவாகி, வளர்ந்து வரும். இதைத் துவக்கத்திலேயே கண்டு பிடிக்காவிட்டால், கர்ப்பக்குழாய் வெடித்து, தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். கர்ப்பம் தரித்த சில வாரங்களிலே ஸ்கேன் கருவி மூலம் பரிசோதித்து விட்டால் குழாய் வெடித்து ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கலாம். ஸ்கேன் பரிசோதனை முழு அளவில் வருவதற்கு முன்பு, கர்ப்பக்குழாய் வெடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கருத்தரித்த 5-வது வாரத்திலேயே, குழந்தையின் இதயத்துடிப்பையும் கண்டுபிடித்து விடலாம்.

முத்துப்பிள்ளை : மரபணுக்களின் குறைபாடுகளால் உருவாவதுதான் முத்துப்பிள்ளை. முத்துப்பிள்ளை உருவானால், கர்ப்பிணிப் பெண்ணைப் போல், எல்லா அறிகுறிகளும் இருக்கும். மாத விலக்கு நின்றுவிடும். வாந்தி இருக்கும். குழந்தை உருவாகி வளர்ந்து வருகிறது என்று பலர் நினைத்துக் கொண்டிருப்பார்கள். சில மாதங்கள், இன்னும் சொல்லப்போனால் 10 மாதங்களுக்குப் பின்னர், பிரசவத்தின்போது தான் அது, முத்துப்பிள்ளை என்று தெரியவரும். அப்போதுதான் அத்