பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

81

தாயின் மனது படும் வேதனையைச் சொல்ல மாளாது. சில நேரங்களில் முத்துப்பிள்ளை புற்றுநோயாக மாறி, தாயின் உயிருக்கே ஆபத்தாக முடித்துவிடும். ஸ்கேன் வந்த பின்னர், இரண்டு அல்லது மூன்று மாதத்திலேயே முத்துப்பிள்ளையாக இருக்க வேண்டுமேயொழிய முத்துப்பிள்ளையாக இருக்கக் கூடாது.

தலை இல்லாமல் பிறக்கும் குழந்தைகளையும் முதல் மூன்று மாதங்களில் கண்டுபிடித்து விடலாம். 10 வாரத்தில் கண்டுபிடித்து அகற்ற வேண்டியதை, அறியாமையால் 10 மாதம் சுமந்து, சிசேரியன் அருவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். விரைவில் ஸ்கேன் செய்தால் இதையெல்லாம் தவிர்க்கலாம். மரபணுக் கோளாறால் குழந்தையின் கழுத்தில் கட்டி இருக்கும். குழந்தை, வளர்ச்சி குறைந்து சிறிதாக இருக்கும். இதையெல்லாம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் முன்பே பார்த்துச் சிகிச்சை பெறலாம்.

குறைவுள்ள குழந்தை : மத்திய மூன்று மாத காலத்தில்தான் (4 முதல் 6 மாத காலம்) குழந்தைக்குக் கை, கால், ஆகியவை முழு வளர்ச்சி அடையும். எனவே இக் காலக் கட்டத்தில் குழந்தைகளின் குறைகளை, ஸ்கேன் மூலம் கருவிலேயே கண்டுபிடித்துச் சிகிச்சை அளிக்க முடியும். சில குழந்தைகளுக்குச் சிறுநீரகம் இருக்காது. சில குழந்தைகளுக்கு வயிற்றின் மேல் தோல் இருக்காது. கை, கால்களில் குறை இருக்கும். குறையோடு வாழமுடியும் என்ற நிலையில் உள்ள குழந்தைகள், நிச்சயமாக வாழவே முடியாது என்ற நிலையில் உள்ள குழந்தைகள், என இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்கின்றோம். குறை இருந்தாலும் வாழமுடியும் என்ற குழந்தைகளுக்கு, அக் குறையைப் போக்க, கருவிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிச்சயமாக வாழ முடியாது என்ற நிலையில் உள்ள குழந்தைகளைக் கருவிலேயே அழித்துவிடலாம்.