பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

85

அது அக்குழந்தையைப் பாதிக்கும். சிலர் கருவை அழிக்க முற்படுவர். முறையற்ற சிகிச்சை முறைகளைக் கையாண்டு கருச்சிதைவு செய்ய முற்படும் போது, தாயின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். எனவே எக்காரணத்தையும் கொண்டும். என்ன குழந்தை என்று முன்கூட்டியே சொல்லக்கூடாது. மேலும், குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிப்பது ஆண்கள் தான். ஏனெனில், குழந்தையின் பாலினத்தை ஆணின் குரோமோசோம் தான் தீர்மானிக்கிறது. இதை மாமியார்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

குடும்ப நலனை காக்க : பொதுவாகப் பெண்கள் தங்கள் உடல்நிலையில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. குழந்தைகளுக்காக, கணவனுக்காக தியாகம் செய்வதே தங்கள் கடமை என்று நினைக்கின்றனர். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். தாயின் உடல் நலம் நன்றாக இருந்தால்தான், அக் குடும்பத்தின் நலமும் நன்றாக இருக்கும். பெண்கள் வழக்கமாக நோய்களை முற்றவிட்டுத் தங்களை வருத்திக் கொண்டு தங்கள் உறவினரையும் துன்பத்துக்கு உள்ளாக்குவார்கள். இதைத் தவிர்க்க, ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் நோயை முன்கூட்டியே கண்டுபிடித்து, உரிய நேரத்தில் சிகிச்சை பெறவேண்டும்.

சிசேரியன் ஏன் அவசியம்?

ம் நாட்டில், ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்வுடன், உற்றார் - உறவினர் கேட்கும் முதல் கேள்வி, சுகப் பிரசவம் தானே? பெண்ணின் பெற்றோர்க்கும், மருத்துவருக்கும் சுகப்பிரசவம் அதிக மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.