பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

பாப்பா முதல் பாட்டி வரை

ஆனால், இப்போது சிசேரியன் அறுவை சிகிச்சைகள் மூலமே அதிக அளவுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன என்றும், பணத்துக்காக மருத்துவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சையைச் செய்வதாகவும் பொது மக்களிடையே தவறான எண்ணம் எழத் தொடங்கி விட்டது.

சிசேரியன் அதிகரிக்கக் காரணம் என்ன? : முற்காலத்தில் கர்ப்பிணிப பெண், குழந்தையைப் பிரச்சினையின்றி பிரசவித்துவிட்டாலே, அவளுக்கு மறுவாழ்வு கிடைத்ததாகக் கருதினர். இதனால் தான் ‘பெற்றுப் பிழைத்தாயோ, செத்துப் பிழைத்தாயோ’ என்ற சொற்றொடரும் அக் காலத்தில் பிரபலமாக இருந்தது. மேலும், அக்காலத்தில் பிரசவ நேரத்தில் இறந்த தாய்மாா்களின் விகிதமும் (Matermal Mortality Rate) அதிகம்.

60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் பிரசவிக்கும் நேரத்தில், கருவில் உள்ள குழந்தையின் உயிரைக் காட்டிலும், தாயின் உயிருக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. ஏனெனில், மயக்க மருத்துவம், ரத்தம் செலுத்துதல், அறுவை சிகிச்சை தையல் உத்திகள் முன்னேறாத காலம் அது. அக் காலத்தில் தாயின் கூபகத்திலிருந்த குழந்தையின் தலையைத் துளைத்து அதை நசுக்கி மடிய வைத்து தாயைக் காப்பாற்றினர். அக் காலத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை இல்லாத காரணத்தால், குழந்தையை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

அமெரிக்காவில் : வளர்ந்துவிட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில், 1970-ல் சிசேரியன் அறுவ சிகிச்சை விகிதம் 5.5 சதவீதம்; 1983-ல் இது 20 சதவீதமாக உயர்ந்தது. 1985-ல் 25 சதவீதமாக உயர்ந்தது. 2000-ம் ஆண்டில் 40 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மருத்துவ முன்னேற்றம், மக்களிடையே விழிப்புணுர்வு, தாய் - குழந்தையின் நலன், மற்றும் குழந்தையின் அறிவுத்