பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

13

பிறகு முருகேசன் உள்ளே சென்று, “அஞ்சலை, குழந்தையின் மனசை நோகடிக்காதே. நம்ப பையன் என்னவெல்லாமோ பேசுறான்; கேட்கிறான். சின்னப் பிள்ளை பேச்சாவே எனக்குத் தோணலை. ஒரு வேளை அவன் கூட பின்னாலே பெரிய மனிதனாக ஆனாலும் ஆகலாம். கல்லுக்குள்ளே இருக்கும் தேரைக்குக்கூட படியளக்கும் சக்தி படைச்சவன் ஆண்டவன். இந்த நாய்க்குட்டி யைப் பகவான் மறந்திடவே மாட்டான். அன்பும் ஆண்டவனும் நமக்குத் துணை இருக்கு; காந்தித் தாத்தா சொல்லித் தந்த உண்மையும் நேர்மையும் நமக்கு நல்ல வாழ்க்கையைத் தரும்,” என்றார் முருகேசன். அவரது கண்களில் கண்ணீர் இருந்தது.

“அப்பா நல்லவருதான். அம்மாவுக்குத் தான் ஜீவ காருண்யம்னா என்னான்னு புரியவே மாட்டேங்குது...!” என்று கூறிய பூபாலன் வானத்துக்கும் பூமிக்குமாகத் தாவிக் குதித்தான்.