பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

பிறகு முருகேசன் தன் ‘காக்கி’ சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துத் தன் மகனிடம் கொடுத்தான்.

அவன் வாசித்தான்:

பூவைமாநகர்
6-10-1989

அன்புள்ள முருகேசன்,

பிறந்த ஊரை மறந்து விட்டாயா? உனக்கு ஒரு ந்ல்ல செய்தியை எழுதவே இந்த லெட்டர் போடுகிறேன். ‘என் பசி ஒருவனின் பசியல்ல; கோடிக்கணக்கான ஏழைகளின் பசி’ என்று வினோபாஜி பூதான இயக்கத்தின்போது சொன்ன சொற்கள் என் இதயத்தைத் தொட்டு விட்டன. நீ நம் ஊர் நாடி வா! என் நிலத்தை உனக்கும் உன் சகோதரர்களுக்கும் பங்கிட்டுத் தருகிறேன்.

இப்படிக்கு
மிராசுதார் சுகவனம்

“அடடே, மிராசுதார் ஐயா புது மனுஷராயிட்டாரே;” என்றாள் அஞ்சலை; அவளுக்கு ஆனந்தம் மேலிட்டது.