பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

15

அப்பொழுது வாசலில் ஒரு பிளஷர் கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு சிறுமி இறங்கினாள். “பூபாலா!” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டுக் கொன்டே உள்ளே துள்ளி ஓடி வந்தாள்.

“வா, பூங்கோதை!” என்று வரவேற்றான் பூபாலன். வாசற் திண்ணைமீது ஒரு கிழிந்த பாயை விரித்து, “உட்கார். இது எங்கள் பங்களாவின் சுழல் நாற்காலி,” என்று உபசரித்தான். பிறகு, “இதோ பார், என்னுடைய மற்றொரு தோழன்,” என்று சொல்லி அந்த நாய்க் குட்டியைக் காட்டினான். பூங்கோதையிடம் அது அமைதியாக அடங்கி யிருந்தது.

“பூபாலன், நான் இன்றைக்கு ராத்திரி சினிமாவிலே நடிக்கப் போகிறேன். எங்க அம்மாவும் என் கூட நடிக் கிறாங்க. நீ வாறியா ஷூட்டிங் பார்க்க?” என்று கேட்டாள் சிறுமி.

“ஓ, பேஷா வாறேன். எனக்குக் கூட படத்திலே நடிக்க வேணும்னு ரொம்பவும் ஆசை. உன்கூட நடிக்கிறதுக்கு எனக்குச்