பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. பூபாலன் ஓடினான்!

“ஏய் தம்பீ!

பூபாலன் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான். வலது காதின் ஓரத்தில் படர்ந்திருந்த செம்மை அவனுக்கு வேதனை தந்தது. தடவிவிட்டுக் கொண்டான். பாவிப் பயல் காதைத் திருகாமல் எழுப்பினால் அவன் குடியா முழுகிப் போய்விடும்?

“ஏன் ஐயா, எங்க பள்ளிக்கூடத்துக் கணக்கு வாத்தியார் கிட்டே நீங்க காதைத். திருகிற வித்தையைக் கத்துக்கிட்டீங்களோ? ...ம்...! என் மாதிரி உமக்கு ஒரு பயல் இருந்தா இப்படிச் செய்வீங்களா?” என்று வேந்தாந்தம் பேசினான் பூபாலன். உடனே அவன் அந்த மனிதனை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் எதிரில் நின்ற அம்மனிதனை எடை போட்டுப் பார்த்தன.