பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

“என் பேர் பூபாலன்! ஐயா, நான் எப்படி இங்கே வந்தேன்? நான் இப்போதே வெளியேற வேணும். என்னுடைய அருமை நாய்க்குட்டியைத் தேடிப் பிடிக்க வேணும். எனக்காக என் அபபாவும் அம்மாவும் வேறே கவலைப்பட்டுக் கொண்டிருப்பாங்க.”

“தம்பி, நீ தெருவில் மயக்கம் போட்டுக் கிடந்தாய். காரில் போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தேன். அது சரி தம்பி, உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேணும். உன்னைப் போல ஒரு கெட்டிக்காரப் பையன் என்னுடைய சர்க்கஸ் கம்பெனிக்கு வேண்டும். உனக்கு வேண்டிய சகல வசதியையும் நான் ஏற்பாடு செய்கிறேன். உன் பெற்றோர்களுக்கும் இப் போதே தகவல் சொல்லியனுப்பி விடுகிறேன். நீ என்னுடனேயே தங்கிவிடு. உனக்கு எல்லா வித்தைகளையும் கற்றுத் தருகிறேன். உன் படிப்புக்கும் ஏற்பாடு செய்கிறேன். உனக்கு இங்கே ஒரு தோழியும் இருக்கிறாள். அல்லி என்று பெயர்.