பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

21

அவள் என்னுடைய ஒரே பெண். ம், சரி என்று சொல்!...”

பூபாலன் என்ன சொல்லப் போகிறானோ என்னவோ என்று சர்க்கஸ் முதலாளி அவன் முகத்தையே உற்று நோக்கியவாறு நின்றார்.

ஐயா. என்பேரில் நீங்க கொண்டிருக்கிற அன்புக்கும் பாசத்துக்கும் ரொம்ப் நன்றி, உங்களுக்கு நான் கடமைப்பட்டவன். எனக்குக்கூட சினிமாவிலே, சர்க்க எபிலே பங்கெடுத்துக் கொள்ளனும்னுதான் ரொம்ப ஆசை. பள்ளிப் படிப்பு மட்டும் எனக்குச் சோறு போட முடியாது. அத்தோடு தொழிற்கல்வியும் அவசியம் தேவைன்னு நம்ம ராஜாஜி அவர்கள் சொல்லியிருப்பதைப்பற்றி வாத்தியார் அடிக்கடி எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆனால்...இப்போ என்னாலே இங்கே, ஏன் எங்கேயும் ஒரு நிமிஷம்கூட தங்கவே முடியாது. என்னுடைய உயிருக்குயிரான நாய்க்குட்டியைக் கண்டு பிடித்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அது இல்-

பாー2