பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

லாமல் எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்குது. அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக்கிட்டு ஸ்டுடியோவுக்குப் போகிறதா இருந்தேன். புறப்படப் போறபோது நாய்க்குட்டியைத் தேடினேன்; கானவில்லை. அதை கார்ப்பரேஷன் நாய் வண்டியிலே தூக்கிப் போட்டுப் போயிட்டதாக என் அம்மா சொன்னாங்க... ஐயா, நான் போயிட்டு வாறேன்,” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் பூபாலன். அவனது கையைப் பற்றியவாறு “தம்பி, அவசரப் படுகிறாயே? நில். நான் உனக்கு அந்த நாய்க்குட்டியைத் தருகிறேன். சரிதானே? அப்புறம் இங்கேயே தங்கி விடுவாயல்லவா?” என்றார் சுகுமாா் புன்புரிப்புடன்.

ஓ, நிச்சயமாக! “என்று தலையைப் பலமாக ஆட்டினான் சிறுவன்.”

“அல்லி!” -அழைத்தார் சர்க்கஸ் உரிமையாளர்.

நீலத்திரையை நுனிவிரலால் நீக்கிக்கொண்டு ஒரு சிறுமி வந்தாள். அவள்