பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. அதோ, நாய்க்குட்டி!

ந்த ஸ்டுடியோ ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.

பூபாலன் வேர்வையைச் சட்டைத் தலைப்பால் துடைத்துவிட்டவாறு, கூர்க்காவின் முன் நின்றான். அவன் ஏதோ கேட்டான். பையன் என்னவோ சொன்னான். இருவருக்கும் இடையில் ஹிந்தியும் தமிழும் உயிரை விட்டுக் கொண்டிருந்தன. கடைசியில் பூபாலன் சைகைக்காட்டி தான் உள்ளே செல்லவேண்டு என்பதையும், அங்கு தன் தோழி பூங்கோதை இருக்கிறாள் என்பதையும் சொன்னான். ஒன்றும் பதில் சொல்லாமல் பையனை ‘கல்தா’ கொடுத்து நெட்டித்தள்ளிவிட்டான் காவற்காரன்.

இருட்டில் கண் தெரியவில்லை. பூபாலன் ஒருமுறை அந்தக் கட்டடத்தை