பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

25

வலம் வந்தான். பிறகு பின்புறமாக வந்து, சுவர் மீது ஏறினான். உள்ளே அமைந்திருந்த ‘செட்’டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சிறுமி பூங்கோதைக்கு டைரக்டர் ஏதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பூங்கோதை அழகாகப் பேசி நடித்துக் கொண்டிருந்தாள். அதே சமயம் அங்கு ஒரு சிறுவன் வந்தான். அவனிடம் டைரக்டர் ஒரு நாய்க்குட்டியைக் கொடுத்து, “ம், நான் சொல்லிக் கொடுத்தபடி நடி, பார்க்கலாம்!” என்று சொன்னார். அந்தப் பையனைக் கண்ட அந்த நாய்க்குட்டி குரைத்துக் கடிக்க முயன்றது. சிறுவன் பயந்து அலறினான்.

அதே சமயம், “ஆ, என் நாய்க் குட்டி!” என்று ஆர்ப்பளித்த வண்ணம் பூபாலன் உள்ளே குதித்து ஓடிவந்தான். அந்த நாய்க்குட்டி அவனைக் கண்டவுடன் சந்தோஷ மிகுதியால் வாலைக் குழைத்தது; அன்புடன் அவனுடைய முகத்தை நாக்கால் நக்கியது.

“பூபாலன், உன்னை எங்கெல்லாம் தேடுவது? உன்னுடைய நாய்க்குட்டியை