பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

கார்ப்பரேஷன் வண்டிக்காரன் தூக்கிப் போகவில்லை. நாம் பேசிக்கிட்டிருந்த போது, ஒரு சினிமா விளம்பரக் கார் வந்த தல்லவா? அந்தக் கார்க்காரன்தான் துரக்கிப் போய்விட்டிருக்கிறான். வழியிலே கண்டுபிடிச்சு, அவனோடு சண்டை போட்டு அதை மீட்டுக்கிட்டு வந்து விட்டோம்!” என்றாள் பூங்கோதை.

அப்போது அவனைத் தேடிக் கொண்டு அவன் பெற்றோர்கள் வந்தார்கள். அன்று கடிதம் போட்டிருந்த மிராசு தார் சுகவனத்தைப் பார்த்துவர பூவை மாநகர் செல்வதாகவும், இரண்டு நாட்களில் திரும்பிவிடுவதாகவும் சொன்னான் முருகேசன். அதுவரையில் பூங்கோதை வீட்டில் தங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது.

பெற்றோர்களை வழியனுப்பி வைக்க ஸ்டுடியோவுக்கு வெளியே வந்தான் பூபாலன்.

அப்பொழுது ஸ்டூடியோ வாசலில் ஒரு கார் வந்து நின்றது. காரில் தன்